சாலையோர பழமையான மரங்களுக்கு ஆபத்து: ஆசிட் ஊற்றி நூதன முறையில் வெட்டி கடத்துவது அதிகரிப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சாலையோரங்களில் நிழல் தரும் பழமையான மரங்களை ஆசிட் ஊற்றி செயற்கையாக பட்டுப்போக வைத்து, வெட்டிக் கடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

நிழல் தரும் மரங்கள்

சாலையோரங்களில் நிழல் தருவதற்கு அசோகர் காலம் முதல் தற்போதைய ஹைடெக் காலம் வரை மரங்கள் நடப்படும் விழிப்புணர்வு இருந்துவருகிறது. முன்னோர்கள் அக்காலத்திலேயே தொலைநோக்கு பார்வையில் சாலையின் இருபுறங்களிலும் நட்ட பழமையான மரங்கள்தான் தற்போது நிழல் தருகின்றன.

சாலையோரங்களில் பொதுவாக புளிய மரம், வேப்பமரம், புங்கன், தேக்கு, ஈட்டி மரம், தோதகத்தி, மருது, யூக்லிப்டஸ் மற்றும் ஆலமரங்கள் உள்ளிட்ட பழமையான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் சமீப காலமாக ஆங்காங்கே இலைகள் உதிர்ந்து பட்டு நிற்கும். உன்னிப்பாக கவனித்தால் சிறிது காலத்தில் அந்த மரங்கள் இருந்த இடம் தெரியாமல் வெட்டப்பட்டுவிடும். இந்த மரங்கள் மாயமாகும் பின்னணியில் மரங்களை வெட்டிக் கடத்தும் கும்பல் திட்டமிட்டு செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் மரங்கள் மீது ஆசிட் ஊற்றி, அந்த மரங்கள் பட்டு விட்டதாகக் கூறி முறைகேடாகவும், அனுமதி பெற்றும் நூதன முறையில் வெட்டிக் கடத்துவதாக புகார் எழுந்தது. தமிழகத்தின் தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலை களில் சமீபகாலமாக இந்த பின் னணியில் மரங்கள் மாயமாவ தாக அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.

மரம் வெட்டும் கும்பல்

இதுகுறித்து வேளாண்மைத் துறை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: மரத்தை வெட்டி கடத்துவோர் முதலில் மரத்தின் கீழ் பகுதி பட்டையை உறித்து ஆசிட் ஊற்றிவிடுவர். சிலர், ஆணியால் மரத்தில் பெரிய துளைபோட்டு அதன் வழியாக இங்க் பில்லரை வைத்து ஆசிட்டை ஊற்றி விடுவர்.

சில நாள்களில் ஆசிட் ஊற்றப்பட்ட இந்த மரங்கள் காய்ந்து இலைகள் கொட்டி இறந்துவிடும். அப்புறம், மரம் பட்டுவிட்டதாகக் கூறி, அனுமதிபெற்றோ, முறைகேடா கவோ வெட்டி விற்கின்றனர். வனப்பகுதியில் இந்த அடிப்படை யிலேயே மரம் வெட்டும் கும்பல் முன்பு ஏராளமான மரங்களை வெட்டிக் கடத்தினர். தற்போது இந்த கும்பல் சாலையோர மரங் களை குறிவைத்துள்ளனர்.

சாலையோரங்களில் காய்ந்த மரங்களை வெட்டுவதற்கு முன் அவை இயற்கையாக வறட்சியால் பட்டுப்போனதா, ஆசிட் போன்ற அமிலங்களை ஊற்றி சாகடிக்கப் பட்டதா என்பதை அவற்றை வெட்ட அனுமதி கொடுக்கும் முன் வனவியல் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆசிட் ஊற்றி அந்த மரம் சாக டிக்கப்பட்டு இருந்தால் அவற்றை அதிகாரிகள் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சமூக விழிப்புணர்வு, சட்டங்கள் கடுமை யாக்கப்பட்டால் மட்டுமே சாலை யோரங்களில் இந்த நூதன முறையில் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க முடியும் என்றார்.

மீண்டும் உயிர் தர முடியுமா?

காந்திகிராமம் பல்லைக்கழக தாவரவியல் துறை பேராசிரியர் ராமசுப்பு கூறியது: பட்டுப்போன எல்லா மரங்களையும் காப்பாற்ற முடியாது. ஆசிட் ஊற்றும் அளவைப்பொறுத்தே மரங்களை காப்பாற்ற முடியுமா, முடியாதா என்பதை கூற முடியும்.

ஆசிட்டில் இருக்கிற வேதிப்பொருட்கள் மரங்கள் உட்கிரகித்துக் கொண்டால் அதில் இருக்கக்கூடிய சைலம் திசுக்கள் முழுமையாக இறந்துபோய்விடும். இந்த சைலம் திசுக்கள்தான் மண்ணில் இருக்கக்கூடிய தண்ணீரை மரத்திற்கு கொண்டு போகக்கூடியது. இந்த திசுக்கள் இறந்துவிட்டால் நூறு சதவீத மரங்களை காப்பாற்ற முடியாது.

அதனால், மரத்தை வெட்டும் கும்பல் ஆசிட் ஊற்றுகின்றனர். வறட்சியால் சாதாரணமாக பட்டைகள் உறிஞ்சி காய்ந்துவிட்டாலும் மரங்களை உயிர்ப்பிக்க முடியாது. இலைகள் மட்டும் உதிர்ந்திருந்தால் அங்கக உரங்கள் மூலம் நிறைய சத்துகள், தண்ணீரை கொடுத்து மீண்டும் இயற்கையாக பட்டுப்போன மரங்களை துளிர் விட செய்யலாம் என்றார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்