கார்த்தி சிதம்பரத்துக்கு காமராஜரின் புகழ் தெரியாது: இளங்கோவன் மறைமுக தாக்கு

காமராஜர் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்துக்களுக்காக அவரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் எஸ்.சி. பிரிவின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான எஸ்.சி. பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோ வன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. தமிழகத்தில் உள்ள உரத்தட்டுப்பாடு குறித்து விளக்குவதற்காக அவர் டெல்லி செல்ல வேண்டும் அங்கு பிரதமர், விவசாயத்துறை அமைச் சர், உரத்துறை அமைச்சர், ஆகியோரை சந்தித்து உரத்தட்டுப் பாடு குறித்து பேச வேண்டும். மேலும் அதிக விளம்பரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவ கங்களில் 2 இட்லி கேட்டல் 1 தான் தருகிறார்கள். சப்பாத்தி அளவு ரொம்பவே சுருங்கிவிட்டது. புதிய திட்டங்களை அறிவிக்காவிட் டாலும், அறிவித்த திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காமராஜர் பேரை சொல்லி மக்களை சந்திக்க கூடாது என்று கார்த்தி சிதம்பரம் பேசியது குறித்து நிருபர்கள் கேட்ட போது, “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று ஒரு பழ மொழி உண்டு. அதுபோல், சில அற்பர்களுக்கு பெரும் தலைவர் களின் புகழ் பற்றி தெரியாது” என்று இளங்கோவன் கூறினார்.

கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை?

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், காமராஜர் பற்றி கூறிய கருத்துக்கள் கட்சியை தாண்டி பல தரப்பையும் கொந்தளிக்க வைத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை நாடார் அமைப்பு ஒன்று நேற்று முற்றுகையிட்டது.

மேலும், அவர் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி தலைமைக்கு பலர் புகார் கடிதம் அனுப்பி வருகின்றனர். இதன்பேரில் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப் படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் இவ்வளவு நாட்களாக சிதம்பரம் ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும் தமிழ்நாடு காங்கிரஸின் எஸ்.சி பிரிவு தலைவருமான கு.செல்வப்பெருந்தகை, தனக் கேதும் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்று இளங்கோவன் பக்கம் சாய்ந்துள்ளார் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படு கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE