தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை: மத்திய தணிக்கைத்துறை அதிகாரிகள் 5 மாவட்டங்களில் ஆய்வு

By இ.மணிகண்டன்

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை விவரம் குறித்து, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மத்திய தணிக்கைத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வைத் தொடங்கினர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழை, எளிய மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளி உள்ள இடத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்குள் இருந்தால் மட்டுமே இடம் அளிக்கலாம் என்ற விதியும் உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் இந்த விதியைக் காட்டி ஏழை மாணவர்களைச் சேர்க்க மறுக்கின்றன. தமிழகத்தில் கடந்த கல்வியா ண்டில் 3,673 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் உள்ள 61,876 இடங்களுக்கு வெறும் 39,329 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீடு 100 சதவீதம் பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளது. இந்த ஆண்டும், இதே நிலைதான் நீடிக்கிறது.

இதையடுத்து, இதற்கான காரணம் குறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொண்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் விருதுநகர், திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் மத்திய தணிக்கைத்துறை அதிகா ரிகள் நேற்று முதல் ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஆய்வில், மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை, மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தி ன்கீழ் சேர்க்கப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கை, இச்சட்டத்தின் கீழ் முழுமையாக மாணவர் சேர்க்கை இல்லாததற்கான காரணம் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வு அறிக்கை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பப்பட்டு, அதன் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ப்பட உள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் தின்படி எந்த தனியார் பள்ளியிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழை, எளிய மாணவர்களை முழுமையாகச் சேர்ப்பதில்லை. ஒரு சில மாணவர்கள் மட்டுமே பெயரளவில் சேர்க் கப்படுகின்றனர். இதற்கு தனியார் பள்ளி நிர்வாகம் பல்வேறு காரண ங்களைக் கூறுகிறது.

இதுதொடர்பாக, கல்வித் துறை அதிகாரிகள் கட்டாயப் படுத்தினாலும், எச்சரித்தாலும் சில தனியார் பள்ளிகள் அதை கண்டுகொள்வதில்லை என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்