அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறைப்பு: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு இன்று விசாரணை

By எம்.சண்முகம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை உச்ச நீதிமன்றம் 20 ஆயிரம் ரூபா யாக குறைத்துள்ளது. மேலும் அவர் செவ்வாயன்று பெங்க ளூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார் பவானி சிங். வழக்கு முடியும் தறுவாயில் இறுதி வாதத்தை தொடராமல் இழுத்த டித்ததால், அவருக்கு ரூ.1.2 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்ததால், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

உடல்நிலையை காரணம் காட்டி, மூன்று வாரம் வழக்குக்கு தடை பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சவுஹான், சலமேஸ்வர் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. பவானி சிங் சார்பில் வழக்கறிஞர் நாகேந் திர ராய் ஆஜராகி, “விசாரணைக் கான தடையை நீட்டிக்க வேண் டும். அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

பவானி சிங்குக்கு விதிக்கப் பட்ட அபராதத்தை நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம், ரூ.20 ஆயிரமாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணைக்கு விதிக்கப் பட்ட மூன்று வார தடை திங்க ளன்று முடிந்தது. தடையை நீட்டிக்க மறுத்த நீதிபதிகள், செவ் வாய்க்கிழமை முதல் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். சாக்கு போக்கு கூறி மீண்டும் வாய்தா வாங்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தனர்.

இந்த வழக்கில் தொடர் புடைய லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் சார்பில் தொடரப் பட்ட வழக்கில், “சொத்து யாருடை யது என்பதை முடிவு செய்யும் வரை, வழக்குக்கு தடை வழங்க வேண்டும்” என்று கேட்டனர். பெங்களூர் நீதிமன்றத்தில் செவ் வாயன்று விசாரணைக்கு வருவ தால், அங்கு சந்திக்கும்படி கூறி, தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து உத்தரவிட்டனர்.

இன்று விசாரணை

இந்நிலையில் இந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் பவானிசிங் ஆஜராகி தனது இறுதி வாதத்தை எடுத்து ரைப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்