மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை

By கி.பார்த்திபன்

திருச்செங்கோடு அருகே புதுப் பாளையம் கிராமத்தில் ராஜாஜி யால் தொடங்கப்பட்ட காந்தி ஆசிர மத்தை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.கே.காளியண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச் செங்கோடு அருகே உள்ள புதுப் பாளையம் கிராமத்தில் கடந்த 1925-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி ராஜாஜியால் காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டது. கிராம சுயராஜ் யத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட காந்தி ஆசிர மத்தை பெரியார் திறந்து வைத் தார். ஆசிரமம் மூலம் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற பல் வேறு சமூக சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், கதர் கிராமத் தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மாவட்டம் தோறும் கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த 1925-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி, 1934-ம் ஆண்டு என இருமுறை மகாத்மா காந்தி, புதுப் பாளையம் காந்தி ஆசிரமத்துக்கு வந்து தங்கி சென்றார். அவர் ஆசிரமத்தில் தங்கியது தொடர் பாக, அவரே எழுதிய குறிப்பு காந்தி ஆசிரமத்தின் அலுவலகத் தில் இன்றளவும் பராமரிக்கப் பட்டு வருகிறது. அதுபோல் 1936-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி நேரு, 1953-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி லால்பகதூர் சாஸ்திரி, கடந்த 1975-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் உள்ளிட் டோர் ஆசிரமத்துக் வந்து பணிகளை பாராட்டிச் சென்றுள்ளனர்.

அவர்கள் ஆசிரமத்துக்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங் கள், அவர்களது கையால் எழுதிய குறிப்புகள் போன்றவை இன்றளவும் ஆசிரமத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி அறையில் வைக்கப்பட்டுள்ளன. அதுபோல், ராஜாஜி தங்கிய அறை, அவர் பயன்படுத்திய பொருட்கள், கடந்த 1934-ம் ஆண்டு மகாத்மா காந்தி 2-வது முறையாக ஆசிரமத் துக்கு வந்தபோது ஏற்றிய கொடிக் கம்பம் போன்றவை ஆசிரமத்தில் உள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஆசிரமத்துக்கு வந்து பார்வையிட்டு ஆசிரமத்தின் பெருமை மற்றும் வரலாறுகளை அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. எனினும், போதிய நிதியின்மை காரணமாக ஆசிரமத்தில் உள்ள தேசத் தலைவர்களின் நினைவுக் குறிப்பு உள்ளிட்டவற்றை பராம ரிப்பு செய்வதில் பல்வேறு சிரமங் கள் உள்ளன.

எனவே, இவற்றை பராமரிப்பு செய்ய போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுபோல், ராஜாஜியால் தொடங்கப்பட்ட ஆசிரமத்தை அருங்காட்சியகமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவருமான டி.எம்.காளியண்ணன் கூறியதாவது:

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் எப்படியோ அதேபோன் றது திருச்செங்கோடு புதுப்பாளைத் தில் உள்ள காந்தி ஆசிரமம். காந் திய கொள்கையில் ஈடுபாடு கொண்ட மூதறிஞர் ராஜாஜி தனது இளமைக் காலத்திலேயே புதுப் பாளையத்தில் காந்தி ஆசிரமத்தை தொடங்கி பல்வேறு சமூக சீர்த் திருத்தங்களுக்காக பாடுபட்டார். அவரால் தொடங்கப்பட்ட ஆசிர மத்தை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்