ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள கிடங்கில் ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
ஈரோடு வீரப்பன்சத்திரம் கோவலன் வீதி பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஜவுளி, விவசாய உற்பத்தி பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவில் இந்த கிடங்கில் திடீரென புகை வந்ததையடுத்து பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஈரோடு கோட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி மதியழகன் தலைமையிலான தீயணைப்புப்படையினர் மூன்று வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கிடங்கினுள் எள் உள்ளிட்ட எண்ணெய் வித்து தானியங்கள் இருந்ததாலும், துணி பண்டல்கள் இருந்ததாலும் தீ வேகமாக பரவி கொளுந்து விட்டு எரியத் துவங்கியது.
இதையடுத்து, பவானி, பெருந்துறை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைகக்ப்பட்டு, கூடுதல் எண்ணிக்கையிலான பணி யாளர்கள் தீ அணைப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி மற்றும் தனியார் வாகனங்களில் விபத்து நடந்த இடத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயை அணைப்பதற்கு வசதியாக கிடங்கின் முகப்பு பகுதி இயந்திரம் மூலமாக இடிக்கப்பட்டது. ஆறு மணி நேரத்துக்கும் மேல் போராடிய நிலையில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் எள் மூட்டைகள், துண்டுகள், துணி பண்டல்கள் உள்ளிட்ட ரூ. ஒரு கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago