தேர்ச்சி பெறாமல் வேலையில் சேர்ந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் நடைபெறும் தகுதித் தேர்வே இறுதி வாய்ப்பு: பள்ளிக் கல்வித் துறை திடீர் அறிவிப்பு

By என்.சன்னாசி

தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் மாதத்துக்கு பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமாக்கப்பட்டது. இதற்குப்பின் அரசு உதவி பெறும் இதர பள்ளிகளில் பணியில் சேர்ந்தாலும் 5 ஆண்டுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவரை 2 முறை தகுதித் தேர்வு நடந்தது. 3-வதாக ஏப்ரல் 20, 30-ல் தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் மார்ச் 1-ல் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு ஓர் உத்தரவு நகல் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் இதர பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஏப்ரல் 29, 30-ல் நடக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முடிவு வெளிவரும் வரை ஊதியம், இதர படிகளைப் பெறலாம். இதுவே கடைசி வாய்ப்பு. இதைப் பயன்படுத்திக்கொள்ளாத ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமல், தேர்ச்சி பெறாமல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் இதர பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் மூலம் விவரத்தை தெரிவித்து ஒப்புதல் பெறவேண்டும். இதன்மீது எந்த மேல் முறையீடும் ஏற்கப்படமாட்டாது என தெளிவுபடுத்த வேண்டும்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எழாது. சிறுபான்மை பள்ளிகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களின் கல்வித் தகுதியை முன்னேற்றும் வகையில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் கோடை விடுமுறை நாட்களில் புத்துணர்வு சிறப்புப் பயிற்சி முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மை பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டோரின் விவரங்களைப் பட்டியலிட்டு உடனடியாக அனுப்ப வேண்டும்.

2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையில் தேர்ச்சி பெற்றவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க லாம். இந்த அறிவுரைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புது உத்தரவு 23.8 2010-க்கு பின், அரசு உதவி பெறும், இதர பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் முருகன் கூறியதாவது:

தரமான ஆசிரியர்களை உரு வாக்கவே தகுதித் தேர்வு வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடக்கவில்லை. 2013-ல் 82 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 2012-ல் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்றனர். ஒரே வேலைக்கு முரண்பாடான மதிப்பெண். எனவே, 2012-ல் 82-க்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். தேர்ச்சி பெறாதவர் களுக்கு ஏப்ரலில் நடக்கும் தகுதித் தேர்வே கடைசி வாய்ப்பு என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற சுமார் 1000 ஆசிரியர்களும், அரசு உதவி பெறும் இதர பள்ளிகளில் 2 ஆயிரம் பேரும் பாதிக்கப்படுவர். சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கான சலுகையை தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் இதர பள்ளிகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் வழங்கலாம். கல்வித் துறை இதை பரிசீலிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்