தனியார் பால் விலையை மீண்டும் உயர்த்த முடிவு: வரும் 9-ம் தேதி முதல் அமலாகும் என தகவல்

By எல்.ரேணுகா தேவி

முன்னணி தனியார் நிறுவனங்கள் பால் விலையை மீண்டும் உயர்த்த முடிவு செய்துள்ளன. ரூ. 6 முதல் 8 வரை விலை உயரலாம் என்றும், வரும் 9-ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் தெரிகிறது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களான திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி ஆகியவை தங்கள் நிறுவனங்களின் பால் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.

இந்த நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப் படும் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க முடிவு செய் துள்ளன. இதனால் விற்பனை விலையை உயர்த்த முடிவு செய்யப் பட்டுள்ளன.

தற்போது தனியார் நிறுவனங் கள் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும் பாலுக்கு ரூ. 27.50-ம், எருமை பாலுக்கு ரூ.36ம் வழங்கி வருகின்றன. தனியார் நிறுவனங்களின் ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ. 40, நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ. 44, முழு கொழுப்புச் சத்துள்ள பால் ரூ. 48, இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ. 36 என்ற விலையில் விற்றுவருகின்றன.

8-வது முறை

கடந்த 2013-ம் ஆண்டு முதல் தனியார் பால் நிறுவனங்கள் இது வரை 7 முறை பால் விலையை உயர்த்தியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 4 முறை பால் விலையை உயர்த்தியுள்ளன.

கடந்த ஜனவரி 20ம் தேதி முதன் முறையாக லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப் பட்டது. பின்பு மார்ச் 9 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் லிட்ட ருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டது. கடைசி யாக கடந்த மாதம் 10-ம் தேதி ரூ.2 உயர்த்தப்பட்டது குறிப்பிடத் தக்கது. கடந்த 2 ஆண்டுகளில் 7 முறை பால் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தினாலும் கொள்முதல் விலையை கடந்த ஜனவரி மாதம் முதல் ரூ.1.50 மட்டும் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டீ விலை உயரும்

பால் விலை அடிக்கடி உயர்த்தப் படுவதால் டீ, காபி, பால் விலை உயர்த்தப்படுகிறது. தற்போது ஒரு டீ ரூ.7, காபி ரூ.8 ஆக உள்ளது. கடைசியாக கடந்த மாதம் தனியார் பால் விலை உயர்ந்தபோது டீ விலை உயரவில்லை என்பது குறிப் பிடத்தக்கது. தற்போது பால் விலை 3 மடங்கு விலை உயர்த்தப் படுவதால் டீ, காபி விலையும் கடுமையாக உயரும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி கூறியதாவது:

தமிழக அரசு பால் விலை உயர்வை கட்டுப்படுத்த பொது மக்கள், பால் முகவர்கள் சங்கம், நிறு வனங்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவை அமைக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். தன்னிச்சையாக அடிக்கடி பால் விலையை உயர்த்தி வரும் தனியார் நிறுவனங்களை கட்டுப் படுத்த தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்