பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றியதில் விதிமுறை மீறல் எதுவும் இல்லை- உயர் நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை பதில்

By செய்திப்பிரிவு

புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு சிறப்பு மருத்துவ மனையாக மாற்றியதில் விதி முறை மீறல் எதுவும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை பதில் அளித்துள்ளது.

இது தொடர்பாக வக்கீல் ஆர்.வீரமணி தொடர்ந்த வழக்கு வருமாறு:

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் காரணங்களால் புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு சிறப்பு மருத்துவ மனையாக மாற்ற முடிவு எடுத்தது. அதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தேன்.

தலைமைச்செயலகத்துக்கு என கட்டப்பட்ட கட்டிடத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி இருந்தது. பின்னர் அதனை மருத்

துவமனையாக மாற்றவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.ஒரு பயன்பாட்

டுக்கு கட்டப்பட்ட மாளிகையை வேறொரு பயன்பாட்டுக்கு மாற்றும் போது சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது விதிமுறைகளுக்கு எதிரானது.இந்த அம்சங்களை கணக்கில் எடுக்காமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன்,எம்.வேணு கோபால் கொண்ட அமர்வில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுப்பணித்துறை சார்பில் செய்யப்பட்ட பதில்மனு:

பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கடந்த பிப்ரவரி 21ம் தேதி அன்று தொடங்கப்பட்டு உலக தரமான மருத்துவசிகிச்சை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பசுமை

தீர்ப்பாயம் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றி உள்ளோம். மாசுகட்டுப்பாட்டு வாரியமும் மருத்துவமனை துவங்க ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் மனுதாரரின் மனு 2013 பிப்ரவரி 20 அன்று தள்ளுபடி ஆனது. ஓராண்டு தாமதத்திற்கு பிறகு இப்போது தாக்கல் செய் துள்ள இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த வழக்கினை வெள்ளிக் கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE