டிஜிட்டல் ஒளிபரப்பை வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு விரைவில் செட்டாப் பாக்ஸ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு கேபிள் டிவி நிறுவனம் எடுத்து வருகிறது. இந்த செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு தற்போதைய நிலவரப்படி, 70 லட்சம் வாடிக் கையாளர்கள் உள்ளனர். இந்நிறுவன சேவை அனலாக் முறையில் மேற்கொள்ளப்பட்டதால், தனியாருக்கு இணையாக துல்லியமான காட்சிகளை வழங்க முடியவில்லை. இந்நிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனம், டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அனுமதி கோரி மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத் திடம் விண்ணப்பித்திருந்தது. பல ஆண்டுகள் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை பெற செட்டாப் பாக்ஸ் அவசியம் என்பதால், எஸ்டி, எச்டி வகை செட்டாப் பாக்ஸ்களை பெறுவதற்கான ஒப்பந்தப் புள்ளியை, அரசு கேபிள் டிவி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:
டிஜிட்டல் ஒளிபரப்புக்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் ஏற்கெனவே பதிவு செய்துள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், இந்நிறுவனத்தின் டிஜிட்டல் கேபிள் டிவி சிக்னலைப் பெற்று தொடர்ந்து தொழில் செய்வதற்கு பதிவு செய்து வருகின்றனர். டிஜிட்டல் கேபிள் டிவி சேவையை தமிழகத்தில் விரைந்து செயல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, செட்டாப் பாக்ஸ் கொள்முதல் செய்வதற்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட் டுள்ளது.
அரசு கேபிள் டிவி நிறுவனத் தின் டிஜிட்டல் சிக்னல் சென்னை யில் உள்ள இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வழங்கப்படும். இதற்காக இக்கட்டுப்பாட்டு அறையின் எம்பிஇஜி2 (MPEG2) தொழில் நுட்பம், எம்பிஇஜி4 (MPEG4) ஆக உயர்த்தப்படும். இந்நிறுவனத் தின் டிஜிட்டல் சிக்னல் ரெயில் டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறு வனங்களின் ஃபைபர் கேபிள் வாயிலாக வழங்கப்படும். இந்நிறு வனத்தின் டிஜிட்டல் சிக்னலை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ரெயில்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் இணைப்பகங் களில் இருந்து பெற்றுக்கொள்ள லாம். இந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் விரை வில் செட்டாப் பாக்ஸ்கள் விநி யோகிக்கப்படும். இந்த சேவை மூலமாக 200 சேனல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தனது தேர்தல் அறிக்கையில் செட்டாப் பாக்ஸ்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அவ்வாறு வழங்க வாய்ப்புள்ளதா என்று அவரிடம் கேட்டதற்கு, அதை அரசு முடிவு செய்யும் என்றார்.
உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் விரைவில் செட்டாப் பாக்ஸ்கள் விநியோகிக்கப்படும். 200 சேனல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago