‘தி இந்து’வில் செய்தி வெளியானதன் பயனாக, கோவை அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.விமலா, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனாக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி டீனாகவும், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் (டிஎம்இ) இயக்குநராகவும் இருந்த டாக்டர் வி.கனகசபை கடந்த ஜனவரி 31-ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை டீன் டாக்டர் கீதாலட்சுமிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை டீனாக உள்ள டாக்டர் ஆர்.விமலா,
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ
மனை டீனாக நியமிக்கப்படுவதாக கடந்த வாரம் சுகாதாரத்துறை அறிவித்தது. ஆனால், இதற்கான மாறுதல் ஆணை கிடைக்காததால், அவர் பொறுப்பேற்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இது தொடர்பான செய்தி, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் கடந்த 24-ம் தேதி வெளியானது. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு விமலாவுக்கு பணி மாறுதல் ஆணையை வழங்கினர். இதனைத் தொடர்ந்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி டீனாக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதே போல தேனி அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை டீன் டாக்டர் மீனாட்சிசுந்தரம், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago