கழிவில்லா தொழில்நுட்பத்தில் இயற்கை விவசாயம்: சிவகங்கை மண்ணை செறிவூட்டிய சென்னைவாசி

By சுப.ஜனநாயக செல்வம்

கருவேல மரங்களின் பிடியில் இருந்து மீட்கும் முயற்சி

கருவேல மரங்களின் பிடியில் இருந்த சிவகங்கை நிலத்தை, கால்நடைகளின் இயற்கை உரத்தால் மண்ணைச் செறிவூட்டி விவசாயமே தெரியாத ஒருவர், கழிவில்லா தொழில்நுட்பத்தில் முழுக்க, முழுக்க இயற்கை விவசாயத்தில் நஞ்சில்லா விளை பொருட்களை விளைவித்து சாதனை படைத்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த தொழில் முனைவர் சி.ஆர்.செந்தில்குமரன்(55). மருந்து பொருள் உற்பத்தி நிறுவனம் நடத்தி வரும், இவருக்கு இயற்கை விவசாயம் மீது தீராத ஆர்வம். இதற்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டம், கொல் லங்குடி அருகே விட்டனேரி கிராமத் தில் சீமைக் கருவேல மரங்கள் மண்டிக் கிடந்த 60 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, விவசாயம் செய்யத் தொடங்கினார். ஆரம்பத் தில் தனது முயற்சிகளில் சிறிது தொய்வடைந்தாலும், நாளடைவில் இயற்கை விவசாயம் இவருக்கு வசமானது.

இதுகுறித்து, 'தி இந்து'விடம் சி.ஆர். செந்தில்குமரன் கூறிய தாவது: சென்னையில் மருந்துத் தொழில் செய்துகொண்டு இருந்த போது, வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத்தால் ஈர்க்கப்பட்டேன். அதுவரை விவசாயமே தெரியாத நான், இயற்கை விவசாயம் செய்ய முடிவு எடுத்தபோது, ரசாயன உரம் பயன்படுத்தாத விவசாய நிலமாகத் தேர்ந்தெடுத்தேன்.

யாரும் விவசாயம் செய்யாத நிலமாக தேடியபோது, நண்பர்கள் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் மண்டிக் கிடந்த கொல்லங்குடி அருகே விட்டனேரி கிராமத்தைத் தேர்வு செய்தேன். வானம் பார்த்த பூமி என்பதால், ஆழ்துளைக் கிணறை அமைத்து, அந்தத் தண்ணீரை குட் டையில் விட்டு அதன் பின்னர் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதால் தண்ணீர் சிக்கனமாக செலவாகிறது. இதற்கு ஆன்லைன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினேன். இயற்கை விவ சாயத்துக்கு அடிப்படையே கால் நடைகளின் கழிவுதான். எனவே, முதலில் 25 பசுமாடுகள் மூலம் விவசாயத்தைத் தொடங்கினேன்.

மாட்டுச் சாணம், கோமியம் தனித்தனியாக கொள்கலனில் சேகரிக்கப்படுகின்றது. இதன்மூலம் பஞ்ச கவ்யம், ஜீவாமிர்தக் கரை சலை தயாரித்து, அதனை தண்ணீ ரோடு கலந்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் பாய்ச்சுவதால் பயிருக்குத் தேவையான சத்துகள் முழுமை யாகக் கிடைத்துவிடுகின்றன. பயிர் களில் பூச்சித் தாக்குதலை கட்டுப் படுத்த, மூலிகையால் ஆன பூச்சி விரட்டியை தயாரித்து தெளிக்கி றோம்.

மாட்டுக்குத் தேவையான தீவனங்கள் எதையும் விலை கொடுத்து வாங்குவது இல்லை. நாங்களே விளைய வைத்து தீவன மாக்குகிறோம். நாட்டுக்கோழி, முட்டைக்கோழிகளை வளர்த்து முட்டைகளை விற்பனை செய்கி றோம். அதன் கழிவையும் உரமாக்கு கிறோம். மரச்செக்கில் எண்ணெய் ஆட்டியது போக எஞ்சும் புண் ணாக்கை மாடுகளுக்குத் தீவனமாக வழங்குகிறோம். இதற்காக எள், கடலை போன்ற எண்ணெய் வித்து களையும் விளைய வைக்கிறோம்.

இயற்கைத் தீவனங்களை உண்டு வளரும் கால்நடைகளிடம் இருந்து கிடைக்கும் சுத்தமான பாலில் இருந்து பால், தயிர், வெண்ணெய், நெய் தயாரிக் கிறோம். சாண எரிவாயு மூலம் வெண்ணெயை உருக்கி நெய் தயாரிக்கிறோம். இயற்கை முறை யில் விளைவிக்கப்படும் காய்கறி கள், மரச்செக்கில் தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகளை சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் பகுதி களில் உள்ள இயற்கை அங்காடி களுக்கு அனுப்புகிறோம்.

தற்போது சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப் படும் நகரவாசிகளுக்கு நஞ்சில்லா உணவு, காய்கறிகள் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது முக்கிய நோக்கம். எங்கள் பண் ணையில் எதையும் கழிவாக எறிவ தில்லை. ஒன்றின் கழிவு, மற்றொன் றின் ஆதாரம். எனவே, ஜீரோ பட்ஜெட் விவசாயம் போல, இது ஜீரோ வேஸ்ட்டேஜ் (கழிவில்லா) தொழில்நுட்பம். எங்களைப் பார்த்து மற்ற விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருவதே எங்களது முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்