அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் தீவிரம்: காளையரை எதிர்கொள்ள காளைகள் தயார்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற தடை யால் 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்கவில்லை. இந்த ஆண்டும் உச்ச நீதிமன்றம் தடையை நீக்க மறுத்ததால் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பில்லாமல் போனது. ஆனால், பொங்கலுக்கு மறுநாள் 16-ம் தேதி அலங்காநல்லூர் கிராம மக்கள் உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி மேற்கொண்டனர். போலீஸார் தடுத்ததால் அவர்களுக்கு ஆதரவாக அங்கு மாணவர்கள் திரண்டனர். அதனால் தடியடி, வாடிவாசல் முற்றுகை, மறியல் என கடந்த 8 நாட்களாக ஜல்லிக்கட்டு போராட்டம் அலங்காநல்லூர் முதல் தமிழகம் முழுவதும் பரவியது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி 22-ம் தேதி தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்க ஏற்பாடுகளும் நடந்தன. மறுநாள் பாலமேட்டிலும், 25-ம் தேதி அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் நிரந்தரச் சட்டம் கோரி முதல்வரை அலங் காநல்லூர் ஊருக்குள் விட மக்கள் மறுத்ததால் ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அலங்காநல்லூர் மட்டுமில்லாது தமிழகம் முழுவதுமே போலீஸார் அதிரடியாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

இதைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் பிப்ரவரி 1, பால மேட்டில் பிப்ரவரி 2, அவனியாபுரத் தில் பிப்.5-ம் தேதி ஜல்லிக் கட்டு நடத்துவதாக அறிவித்து சம்பந்தப்பட்ட ஊர் கமிட்டி நிர்வாகி கள் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாகியுள்ளனர். அலங்காநல் லூரில் கடந்த 8 நாட்களுக்கு பிறகு நேற்று இயல்பு நிலை திரும்பியதால் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு காளைகளை தயார்படுத்தத் தொடங்கிவிட்டனர். பாலமேடு, அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளில் அந்த ஊர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் இருந்தன. 2006-ம் ஆண்டுக்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்ற நெருக்கடியால் காளைகள் எண்ணிக்கை குறைந்தன. தற்போது ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதால் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் வளர்க்கப்படும் 500-க் கும் மேற்பட்ட காளைகளை நேற்று முதல் ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்யத் தொடங்கினர். அதனால், தென் மாவட்ட கிராமங்களில் தற்போது ஜல்லிக்கட்டு உற்சாகம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து வீர விளையாட்டு மீட்புக் கழக மாநிலத் தலைவர் ராஜேஷ் கூறும்போது,

“2006-ம் ஆண்டுக்குப் பிறகு ஜல்லிக்கட்டுக்கு நடத்துவதற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டாக ஜல்லிக்கட்டு நடக்காத நிலையில், இந்த ஆண்டும் தடை நீடித்ததால் நாங்களும் நம்பிக்கை இழந்தோம். ஆனால், மாணவர்கள் போராட்டத்தால் தற்போது ஜல்லிக்கட்டு நிரந்தர சாத்தியமாகி உள்ளது.

அலங்காநல்லூரில் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 400-க்கும் மேற்பட்ட காளை களை களத்தில் இறக்க திட்டமிட் டுள்ளோம். இந்த போட்டியை தொடங்கிவைக்க முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்