குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது மத்திய அரசிடம் சண்டைபோட்டு திட்டங்கள், நிதியைப் பெற்றுச் செல்வார். அவரையே பின்பற்றி நானும் மத்திய அரசிடம் போராடுவேன் என்று முதல்வர் நாராயணசாமி பேசினார்.
புதுச்சேரி அரசு சார்பில் காமராஜரின் 114 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேரு வீதியில் உள்ள காமராஜ் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் காமராஜர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
''காமராஜர் இறக்கும்போது 4 வேஷ்டி, சட்டை மட்டுமே இருந்தது. ஆனால், இப்போதுள்ள அரசியல்வாதிகள் வரும்போதே கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்டுதான் பதவிக்கு வருகின்றனர். அனைத்துக்கும் கமிஷன் பேசுகின்றனர். அதனால்தான் இத்தகைய அரசியல்வாதிகள் வந்தவேகத்திலேயே காணாமல்போகின்றனர். அரசியல்வாதிகளுக்கு தியாக மனப்பான்மை தேவை, கமிஷன் அடிக்கும் எண்ணம் கூடாது.
காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 40 நாட்கள் ஆகிறது. பல்வேறு துறைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளோம். நாளொன்றுக்கு 4 அல்லது 5 மணிநேரம்தான் தூங்கவே முடிகிறது. நானும், அமைச்சர்களும் அந்த அளவுக்கு பணியாற்றி வருகிறோம். கூட்டுறவுத்துறை, அரசு பஞ்சாலைகள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகிறது.
கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் டம்மியாக இருந்தனர். முதல்வர் முன்பு அமைச்சர்கள் கைகட்டி நின்றால் அதிகாரிகள் எப்படி அமைச்சர்களை மதிப்பார்கள்? காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளோம்.
கடந்த ஆட்சியாளர்கள் டெல்லிக்கே சென்றது கிடையாது. செங்கல்பட்டு வரை போய்விட்டு திரும்பிவிடுவர். ஆனால் நானும், அமைச்சர்களும் பிரதமர் மோடியை சந்தித்து அரைமணிநேரம் பேசிவிட்டு வந்தோம். அவர்கள் நமது தேவையை பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
குஜராத் முதல்வராக நரேந்திரமோடி இருந்தபோது மத்திய அரசிடம் சண்டைபோட்டு திட்டங்கள், நிதியைப் பெற்றுச் செல்வார். அவரையே பின்பற்றி நானும் மத்திய அரசிடம் போராடுவேன்'' என்று நாராயணசாமி பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago