நக்ஸலைட்கள் நடமாட்டத்தை தடுக்க பழங்குடியின பெண்களுக்கு காவலர் தேர்வு பயிற்சி: தேனி காவல்துறை திட்டம்

By ஆர்.செளந்தர்

நக்ஸலைட் நடமாட்டத்தைத் தடுக் கும் வகையில், பழங்குடியின பெண்களுக்கு காவலர் தேர்வு க்கான பயிற்சி அளிக்க தேனி, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை திட்டமிட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே முருகமலை வனப் பகுதியில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட நக்ஸலை ட்டுகளான பழனிவேல், வேல்மு ருகன், முத்துச்செல்வம் ஆகி யோரை 2007 ஜூன் 26-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். நக்ஸலைட் மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி உட்பட 4 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர். வருசநாடு வனப்பகுதியில் 2007 நவ. 20-ம் தேதி மகாலிங்கம், முருகானந்தம், மருது, லோகேஷ், பாலமுருகன் ஆகிய 5 நக்ஸல்கள் கைதாகினர்.

2008-ம் ஆண்டு ஏப்.19-ம் தேதி வடகவுஞ்சி வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்ஸல்களுடன் போலீஸார் நடத்திய துப்பாக்கி சண்டையில் தருமபுரியை சேர்ந்த நவீன் என்ற நவீன்பிரசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது சுந்தரமூர்த்தியின் மனைவி சந்திரா உட்பட 8 பேர் தப்பினர். இதனை யடுத்து தேனி, திண்டுக்கல் மாவட்ட மேற்கு மலை தொடர்ச்சி வனப்பகுதியில் நக்ஸல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீஸார் தேடு தல் வேட்டையில் ஈடுபட்டனர். நக் ஸல்கள் சிக்காததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், 4 நாட்களுக்கு முன் கரூரில் பதுங்கிருந்த சந்திரா, கலா என 2 நக்ஸல்களை போலீஸார் கைது செய்தனர். சந்திரா, நக்ஸல் தலைவர் சுந்தரமூர்த்தியின் மனைவி எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சென்னை படப்பை பகுதியில் பதுங்கியிருந்த ரீனா ஜாய்ஸ்மேரி என்ற நக்ஸல் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் நடத்தப்பட்ட விசார ணையில், தமிழகத்தில் நக்ஸல்கள் கால் ஊன்றத் திட்டமிட்டது தெரியவந்தது. இதனையடுத்து தமிழகம், கேரளம், ஆந்திர மாநில மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி எல்லைகளில் போலீ ஸார் நக்ஸல்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் அகமலை, வருசநாடு, சுருளிமலை, குமுளி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட் டுள்ளனர். மேலும் பழங்குடியின பெண்களுக்கு காவலர் தேர்வு பயிற்சி அளிக்கவும் திட் டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறியது: திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு மலை கிராமத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு, நக்ஸல்கள் தங்கி துணி வியாபாரம் செய்து வந்தனர். அப்போது மலைகிராம பழங்குடி இன மக்களை மூளைச்சலவை செய்து, தங்களது இயக்கத்தில் சேர்க்க முயன்றனர். விசாரணையில் தெரியவந்ததால் இந்த திட்டம் முறியறிக்கப்பட்டது. பொதுவாகவே நக்ஸல்கள் பழங்குடியினரின் ஆதரவை பெற முயன்று வருகின்றனர். இதனை ஆரம்பத்திலேயே தடுக்க தேனி, திண்டுக்கல் மாவட்ட பழங்குடியின பெண்களை காவல் பணியில் சேர்க்க அவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சேரும் பெண்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். இதற்காக 50 படித்த பெண்களை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்