விடுதிகளுக்கு பூட்டு: கல்லூரி வளாகத்துக்குள் தங்கும் நர்ஸிங் மாணவிகள்

By செய்திப்பிரிவு

நர்ஸிங் மாணவிகள் தங்களுடைய கோரிக் கைகளை வலியுறுத்தி 6-வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட் டம் நடத்தும் மாணவிகள் தங்கும் விடுதி பூட்டப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் கல்லூரி வளாகத்தில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசுக் கல்லூரிகளில் படிக்கும் நர்ஸிங் மாணவிகளுக்கு அரசு மருத்துவமனை களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள 1800 நர்ஸிங் மாணவி கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். இந்த போராட்டம் 6-வது நாளாக தொடர்ந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி களுக்குக் கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறைகள், விடுதி அறைகள் ஆகியவை நிர்வாகத்தினரால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி நர்ஸிங் மாணவி ஒருவர் கூறுகையில் “கழிப்பறைகளுக்குச் செல் லும் மாணவிகளிடம் போராட்டத்தைக் கைவிட்டு விடுவேன் என்று கையெழுத்து போட்டுக் கொடுத்தால் கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்று நிர்வாகம் மிரட்டுகிறது. இரவு நேரங்களில் விடுதி அறை பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் வளாகத்தில் திறந்த வெளியில் பனியில் படுத்துக் கொள்கிறோம்'' என்றார்.

கஸ்தூரிபா காந்தி மருத்துவ மனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி கூறுகையில் “விடுதியில் இருந்து வெளியில் விடாமல் பூட்டி வைத்துள்ளனர். ஆதலால் பூட்டிய விடுதிக்குள் இருந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்’’ என்றார்.

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் கே. சரத் கூறுகையில் “கழிப்பறைகளைப் பூட்டியதோடு போராட்டத்தில் உள்ள மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை உணவு வழங்கப்படவில்லை. நிர்வாகம் இப்படி நடந்துகொள்வது கண்டனத்துக்குரியது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்