மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை தேர்வில் 1007 பேர் பங்கேற்றனர். அவர்களில் 363 பேர் மட்டுமே தேர்வாகினர். 644 பேர் வெளியேற்றப்பட்டதற்கு உயரம் குறைவாக இருந்ததும், கயிறு ஏறுதலில் தோல்விடையந்ததும் முக்கிய காரணம் என போலீஸார் தெரிவித்தனர்.
தமிழ்நாடு சிறப்புக்காவல் இளைஞர் படைக்கு ஆட்களைத் தேர்வு செய்ய தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 10-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மாவட்டந்தோறும் திங்கள்கிழமை தொடங்கியது.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்ட காவல்துறை மூலம் விண்ணப்பித்தவர்களுக்கான உடல்தகுதி தேர்வு சிறப்புக் காவல்படை 6-வது பட்டாலியன் வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.பி. வீ.பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் இளைஞர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இத்தேர்வில் பங்கேற்க 600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 533 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், தடை தாண்டுதல் போன்றவை நடத்தப்பட்டன. மேலும் உயரம், மார்பளவு அளவிடப்பட்டது. இவற்றில் 201 பேர் தேர்ச்சி பெற்றனர். 332 பேர் தகுதி இழந்து வெளியேற்றப்பட்டனர். 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் உடல்தகுதித் தேர்வு நடைபெறுகிறது. மதுரை மாவட்ட போலீஸார் மூலம் 255 பேரை தேர்வு செய்ய தமிழக அரசு அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகரம்
அதேபோல் மதுரை மாநகர காவல்துறை மூலம் விண்ணப்பத்தோரில் 567 பேர் உடல்தகுதித் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 474 பேர் வந்திருந்தனர். இவர்களுக்கு துணை ஆணையர் எம்.ராஜராஜன் தலைமையிலான போலீஸார் உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புப்பணியில் ஈடுபட்டனர். அவற்றில் 162 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மாநகர போலீஸ் மூலம் 110 பேரை மட்டுமே தேர்வு செய்ய தமிழக அரசு அனுமதித்துள்ளது.
இதுபற்றி போலீஸாரிடம் கேட்டதற்கு, ‘உடல்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்ச்சி பெற்றுள்ள 162 பேரின் பட்டியலும் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். அவர்களில் எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் 110 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றனர்.
மதுரை மாநகரம், மாவட்டம் என இரண்டிலும் 1007 பேர் தகுதித்தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களில் 363 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். வெளியேறிய 644 பேரில் பெரும்பாலானோர் உயரம் மற்றும் கயிறு ஏறுதலில் கோட்டைவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு 230 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த உடல் தகுதித் தேர்வில், எழுத்து தேர்வில் வெற்றிபெற்ற 1,207 பேர் கலந்து கொண்டனர்.
திங்கள்கிழமை முதல் நாள் உடல் தகுதித் தேர்வில் 600 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல் நடைபெற்றது. அதன்பின் 1,400 மீட்டர் ஓட்டப் பந்தயம், கயிறு ஏறுதல், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை 607 பேர் கலந்து கொள்கின்றனர். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் உடல் தகுதித் தேர்வுகள் நடைபெற்றன. திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம் இந்த உடல் தகுதித் தேர்வை ஆய்வு செய்தார். தேர்வு முழுவதையும் வீடியோ மூலம் போலீசார் பதிவு செய்தனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago