திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியை மையப்படுத்தி சுமார் 760 சதுர கி.மீ. பரப்பளவில் சுமார் 500 மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் உள்ள பழுப்பு நிலக்கரி மீது, மீத்தேன்வாயு படர்ந்துள்ளது. இவற்றில் 691 சதுர கி.மீ. பரப்பள வில் படர்ந்துள்ள மீத்தேனை வெளிக்கொணர்வதுதான் காவிரிப் படுகை மீத்தேன் திட்டம்.
இதற்காக தஞ்சாவூரில் 12 கிரா மங்களிலும், திருவாரூர் மாவட்டத் தில் 38 கிராமங்களிலும் ஆழ் துளைக் கிணறு அமைத்து அதன் வழியாக மீத்தேன் வாயுவை எடுப்பதற்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் (ஜிஇஇசிஎஸ்) கடந்த 2011-ம் ஆண்டிலேயே மத்திய அரசின் அனுமதியைப் பெற்றது.
ஆனால், இத்திட்டத்தினால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கும் எனக் கூறி பொதுமக்களும், விவ சாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித் தனர். இதையடுத்து, மீத்தேன் எடுக்க தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்து விசாரித்து 2015-ல் நிரந்தர தடை விதித்தது.
மத்திய அமைச்சர் அறிவிப்பு
இதற்கிடையில், இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியாகப் போரா டிய நம்மாழ்வார் மறைவுக்குப் பிறகு இத்திட்டம் குறித்த எதிர்ப்பும் விழிப்புணர்வும் மக்களிடம் அதிக ரித்தது. இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அடிப்படை பணிகளைக்கூட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் செய்யவில்லை எனக்கூறி இந்நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக கடந்த 2015 மார்ச்சில் அறிவித்தார்.
இந்நிலையில், மத்திய சுற்றுச் சுழல் அமைச்சகத்தை கடந்த 2015-ம் ஆண்டில் மீண்டும் அணு கிய கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப் பரேஷன் நிறுவனம், மீத்தேன் திட்டத்துக்காக ஏற்கெனவே கொடுத்த திட்டத்தில் சில திருத் தங்கள் செய்து மீண்டும் ஒரு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது.
அதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 27, 28 தேதிகளில் “எக்ஸ்பர்ட் அப்ரைசல் கமிட்டி” கூடி விவாதித்தது. அதில் ஜிஇஇசிஎஸ் கொடுத்த திருத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிசக்தித் துறை அமைச்சர் இந் நிறுவனத்துக்கு கொடுத்த அனு மதியை ரத்து செய்துவிட்டதாக அறிவித்தாலும், சுற்றுச்சூழல் துறை இந்நிறுவனத்தின் திருத் தத்தை ஏற்றுள்ளதாகக் கூறுவதன் மூலம், மத்திய அரசு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தை முற்றிலும் புறக்கணித்துவிடவில்லை. அண்மையில் அறிவித்த ஒற்றைச் சாளர முறையிலான லைசென்ஸ் முறையில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருவ தாக விவசாயிகளும், சமூக ஆர்வ லர்களும் அச்சம் தெரிவித்துள்ள னர்.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவி யல் இயக்க நிர்வாகி வி.சேதுராமன் கூறியது:
தமிழக அரசு கடந்த 2013-ல் அமைத்த நிபுணர் குழுவில் நீரியல், வேளாண், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இடம்பெற்றிருந் தனர். அந்தக் குழுவின் முடிவின் படியே தமிழக அரசு அக்டோபர் 2015-ல் இத்திட்டத்துக்கு நிரந்தர தடை விதித்தது. இத்திட்டம் எந்த வகையிலும் பயனளிக்கக் கூடியதல்ல என்றார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டி யன் கூறியது:
மத்திய அரசு, தமிழகத்தை வஞ் சிப்பதைத்தான் இது காட்டுகிறது. எந்த நிலையிலும் இத்திட்டத்தை அனுமதிக்கக்கூடாது. இதுகுறித்து, வரும் 25-ம் தேதி மாலை 4 மணிய ளவில் மன்னார்குடியில் அனைத்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் இளைஞர்கள் பங்கேற்கும் ஆலோ சனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், தொடர் போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும். தொடர்ந்து, மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து வரும் 25-ம் தேதி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரவுள்ளோம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago