இன்று முதல் மீனவர்கள் படிப்படியாக விடுதலை: டெல்லியில் பேச்சு நடத்திய பிறகு இலங்கை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

காவலில் உள்ள மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த செவ்வாய்க்கிழமை மாலை அதிகாரி களுடன் டெல்லி வந்தார் இலங்கை அமைச்சர் ரஜீதா சேனரத்னே. இந்த குழுவுடன் மத்திய உணவுதுறை அமைச்சர் சரத்பவார் மீன்வளத்துறை அதிகாரி களுடன் இணைந்து புதன்கிழமை காலை சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் ரஜீதா கூறியதாவது: இலங்கையிலிருந்து இன்னும் 136 பேரும், இந்திய சிறைகளில் இருந்து 160 பேரும் விடுதலையாக உள்ளனர். இதற்காக எந்தவிதமான நிபந்தனைகளும் கிடையாது. மீனவர்கள் விடுதலையின்போது பறிமுதலான மீனவர் படகுகளும் விடுவிக் கப்படும். மீனவர்களை விடுதலை செய்ய எனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்.

இலங்கை சிறையில் இருக்கும் அனைத்து மீனவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள். இதுபோல் கைது நடவடிக்கை ஏற்படாமல் இருக்க இரு நாட்டினரும் பங்கேற்கும் பேச்சு வார்த்தை நடத்தப்படும். அதற்கு முன் ஏற்கனவே, முடிவு செய்த ஏற்பாடுகளை செய்து முடிக்க வேண்டி உள்ளது.

மேலும், 2008ல் இந்தியா- இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இருநாட்டு தரப்பிலும் ஆறு பேர் கொண்ட நிரந்தரக் குழு அமைக்கப்படும். அந்த குழுவின் முதல் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடை பெறும். பிற்பகல் 12.00 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு இந்தியா தரப்பில் மத்திய அரசின் கால்நடைத் துறை செயலரும் இலங்கை சார்பில் அதன் மீன்வளத்துறை தலைமை இயக்குநர் ஆகியோரும் தலைமை ஏற்பார்கள் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்