நவீன கல்வி உத்தியுடன் திறன் வளர்ப்பு சேவைக்காக தகவல் தொழில்நுட்ப விருது வென்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்

By ஆர்.டி.சிவசங்கர்

தேசிய தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதை நீலகிரி மாவட் டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர் பெற்றுள்ளார்.

இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும்பொருட்டு, மனித வள மேம்பாட்டு அமைச்ச கத்தின் சார்பில், கடந்த 5 ஆண்டு களாக தேசிய அளவில் தகவல் தொழில்நுட்ப கற்பித்தலை ஊக்கப் படுத்தும் வகையில் போட்டிகளை நடத்தி, ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த ஓர் ஆண்டாக தேசிய அளவில் நடந்த இதற்கான தேர்வுகளில் 11 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அதில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தேனாடு பள்ளி ஆசிரியர் தர்மராஜ் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார்.

நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகளான மடிக்கணினி, ஆண்ட் ராய்ட் மொபைல் போன், இணையம் போன்றவற்றின் மூலம் ஆசிரியர் தர்மராஜ் சிறப்பான கல்வியை மலைவாழ் கிராமப் பள்ளியில் ஏற்படுத்தி, மாணவர்களுக்கு நவீன கல்வி உத்தியுடன் கூடிய திறனை வளர்த்து சேவையாற்றியதன் வாயிலாக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் தேசிய விருதை டெல்லியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி னார். விருதுடன் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட் டன.

ஆசிரியர் தர்மராஜ், தனது பள்ளியில் எந்த ஒரு அடிப்படை தொழில்நுட்ப வசதிகளும் இல் லாத நிலையில் சொந்த செலவில் கணினி, மடிக்கணினி, ஒலிபெருக்கி கருவி, கேமரா முதலியவற்றை வாங்கி, அதனைப் பள்ளியின் வளர்ச்சிக்காக வழங்கி வருகிறார்.

இவர் தயாரித்துள்ள காடுகள் மற்றும் வன விலங்குகள், மனித உறுப்பு மண்டலம், சிறுநீரகம், நுரையீரல், வேதிச்சமன்பாடுகள், இருவித்திலை தாவரத்தின் தண்டு வேர் தொகுப்பு இவற்றின் உள் தோற்றம், பணி, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்ற பல வீடியோ பாடத் தொகுப்புகளைப் பள்ளி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதைத் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் இணையம் மூலம் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு களைச் செய்துள்ளார்.

300 வீடியோ சோதனைகள்

இதுகுறித்து ஆசிரியர் தர்மராஜ் கூறியதாவது: இந்த பாடத்தொகுப்புகள் 4 முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்க ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அறிவியல் மற்றும் கணிதப் பிரிவு களில் சுமார் 300 சோதனைகளை வீடியோ தயாரிப்புகளாக மாநிலக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தற்போது தயா ரித்து வருகிறேன். இந்த மாத இறுதிக்குள் இவை நிறைவு பெறும். அதன் பிறகு மாநில அரசின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு, கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர் களுக்கும் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

சேர்க்கை அதிகரிப்பு

இவரின் இத்தகைய வித்தியாச மான தொழில்நுட்ப அணுகுமுறை யின் காரணமாக இவர் பணியாற்றும் பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 15-ல் இருந்து நடப்பு கல்வியாண்டில் 45 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 400 சதவீதம் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுவரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணி யாற்றும் ஆசிரியர்கள் மட்டுமே தேசிய அளவிலான தொழில்நுட்ப ஆசிரியர் விருதைப் பெற்றுள்ளனர். தொடக்கப்பள்ளி ஆசிரியரும் இதனைப் பெற முடியும் என்பதை தர்மராஜ் நிரூபித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்