ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க குடும்பம், குடும்பமாக படையெடுத்த மதுரை மக்கள்: தெருக்களின் மூலை, முடுக்கெல்லாம் பரவிய போராட்டம்

By என்.சன்னாசி

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மதுரை தமுக்கம் சந்திப்புக்கு குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் திரண்டு வந்ததால் கோரிப்பாளையமே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. தெருக்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்க மக்கள் கூடினர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை தமுக்கம் சந்திப்பில் மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு, பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று கடை அடைப்பு நடத்தினர். பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் போராட்ட களம் நான்காவது நாளான நேற்று தீவிரமடைந்தது.

மதுரையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பொது மக்கள் குடும்பம், குடும்பமாக தமுக்கம் சந்திப்பு நோக்கி படையெ டுத்தனர். கைக் குழந்தைகளுடன் பெண்களும், கர்ப்பிணிகளும் ஆர்வமுடன் வந்தனர். இளை ஞர்கள் ஜல்லிக்கட்டு காளை படங்கள் அடங்கிய பேனர், பதாகைகளுடனும், மேள, தாளம், தாரை தப்பட்டைகள் முழங்க உற்சாகத்துடன் போராட்டக் களத்திற்கு வந்தனர்.

ஜல்லிக்கட்டு உணர்வை புகட்டும் நோக்கில் குழந்தைகளுடன் பெற்றோரும் பங்கேற்றனர். இதனால் போராட்ட களத்தில் பொதுமக்கள் கூட்டம் நேற்று வழக்கத்தைக் காட்டிலும் அதிக மாகக் காணப்பட்டது.

மாணவிகள் குழுவாக அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தமுக்கத்தை சுற்றியுள்ள சிலைகள், மரங்கள், சாலை தடுப்புகளில் மாணவர்கள் ஏறி போராடினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக தமுக்கம் நினைவுத்தூண் அருகே சமையல் நடைபெற்றது.

மதுரையில் சித்திரை திருவிழாவி ன்போது, கோரிப்பாளையத்தில் மக்கள் வெள்ளத்தை பார்க்கலாம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தால் அப்பகுதி சித்திரை திருவிழா கூட்டத்தை மிஞ்சியது.

ஆங்காங்கே மைக் பேச்சு, இசை முழக்கம், உற்சாக கோஷம் என களம் களை கட்டியது. பொதுமக்கள் போக்குவரத்து குறித்தோ, கடையடைப்பு குறித் தோ கவலைப்படவில்லை. பல்வேறு பகுதிகளில் இருந்து நடந்தே கோரிப்பாளையம் வந்தனர்.

அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் நலன் கருதி, போலீஸார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக ஒருவழிப் பாதையாக செயல்பட்டது. கோரிப்பாளையம் பகுதியில் கடந்த 4 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாற்று வழியில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.

மதுரை செல்லூர் அருகே வைகை ஆற்றுப் பாலத்தில் கோவை-நாகர்கோவில் பயணிகள் ரயிலை மாணவர்கள் வியாழக்கிழமை முதல் மறித்து வருகின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் ரயில்கள் மானாமதுரை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து புறப்படும் ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மதுரை நகரில் தெருவெங்கும் இப்போராட்டம் நேற்று பரவியது. சிலர் தெருக்களில் கூடியிருந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். மதுரை அண்ணா நகர், செல்லூர், பைபாஸ் சாலை, பழங்காநத்தம் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் செய்தனர். புறநகரில் கோவில் பாப்பாகுடி, சிக்கந்தர்சாவடி, திருமங்கலம், உசிலம்பட்டி, வன்னி வேலம்பட்டி, மேலூர், ஒத்தக்கடை உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மறியல், ஆர்ப்பாட்டம் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்