தமிழக சட்டமன்றத்தில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்

தமிழக சட்டமன்றத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தமிழக அரசு தொடங்கி வைத்த சிறிய பஸ்களின் படத்தை கொண்டுவந்த தி.மு.க. உறுப்பினர்கள், புதிய பஸ்களில் இரட்டை இலை சின்னம் இருந்ததை சுட்டிக்காட்டி முழக்கமிட்டதால் சட்டமன்றத்திலிருந்து தி.மு.க.-வினர் வெளியேற்றப்பட்டனர்.

நேற்று பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்த தி.மு.க. தலைவர் கருணானிதி: முதல்வர் தொடங்கி வைத்துள்ள அரசு பஸ்களில் எல்லாம் இரட்டை இலை சின்னம் போடப்பட்டுள்ளது.

அதைப்போலவே அம்மா குடிநீர் பாட்டில் திட்டம் கொண்டு வந்தபோதும் அதில் இரட்டை இலை சின்னத்தைப் பொறித்திருப்பதாகச் செய்தி வந்தது.

எனவே இந்தத் திட்டங்கள் எல்லாம் மக்கள் நிதியிலிருந்து அரசின் சார்பில் நிறைவேற்றப்படுகின்றனவா அல்லது அ.தி.மு.க. எனும் அரசியல் கட்சியின் சார்பில் தனிப்பட்ட முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா? என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE