கடும் வறட்சி பாதிப்பு: பால் உற்பத்தி குறைந்தது

By டி.செல்வகுமார்

வறட்சி காரணமாக தமிழகத்தில் பால் உற்பத்தி தினமும் 2 லட்சம் லிட்டர் குறைந்தது. கடந்தாண்டு இதே காலத்தில் நாள்தோறும் 27 லட்சம் லிட்டர் உற்பத்தியானது. இந்தாண்டு 25 லட்சம் லிட்டராக குறைந்துவிட்டது.

சேலம், ராசிபுரம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயி களுக்கு ஆடு, மாடு வளர்ப்பு உப தொழிலாக இருப்பதால் அங்குள்ள விவசாயக் குடும்பங் கள் தற்கொலை, அதிர்ச்சி மரணங்களில் இருந்து தப்பி வருகின்றன.

அந்தப் பகுதியில் வளர்க்கப் படும் பசுக்கள், எருமைகள் கொடுக்கும் பால் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்து வருகிறது. இருப்பினும், நெல் விளைச்சல் பாதிப்பால் வைக்கோல் வரத்து கணிசமாகக் குறைந்துவிட்டது. வறட்சியால் மேய்ச்சலுக்கும் புல் இல்லை.

எனவே, கலப்பு தீவனத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டி யுள்ளது. இதனால் கடந்தாண்டு டன் ஒப்பிடுகையில் பால் உற்பத்தி குறைந்துள்ளது.

இதுகுறித்து கால்நடைத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்தாண்டு இதே காலத்தில் தினமும் 27 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டது. வறட்சி காரணமாக இந்தாண்டு நாள்தோறும் 25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. சராசரி யாக தினமும் 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி குறைந்துள்ளது” என்றார்.

தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் நலச் சங்க தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் கூறிய தாவது:

கடந்தாண்டு கோடையின் போது தினமும் 31 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியானது. வறட்சி காரணமாக இந்தாண்டு பால் உற்பத்தி 6 லட்சம் லிட்டர் குறைந்து, நாள்தோறும் 25 லட்சம் லிட்டர் மட்டுமே உற்பத்தியாகிறது.

புல், வைக்கோல் கிடைக்காத நிலையில் கலப்பு தீவனத்தைத் தான் நம்பி இருக்கிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்