தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் இன்று பகல் 12 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, மனித நேய மக்கள் கட்சியினர் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்புச் செய்த ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். "ஆளுநர் உரையில் இடம்பெறவேண்டிய அனைத்தையும், முதல்வர் ஏற்கெனவே அறிக்கைகளாக வெளியிட்டுவிட்டதால் ஆளுநர் உரை தேவையற்றதாகிவிட்டது" என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மேலும் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை காக்கவோ, விலைவாசியை கட்டுப்படுத்தவோ அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆளுநர் உரை:
ஆளுநர் ரோசய்யா அவரது உரையில், தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். உணவு பாதுகாப்புச் சட்டத்தால் எந்த வித பயனும் இருக்காது என்ற மாநில அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு தனியாக ஒரு இணையத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago