100 நாட்களில் சொல்லும் அளவுக்கு முதல்வர் பழனிச்சாமி அரசு எந்தச் சாதனையையும் செய்யவில்லை என்று அதிமுக ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மேட்டூர் அணை தூர்வாரும் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை. ஏற்கெனவெ பல அவமானங்களைச் சந்தித்ததால் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க முடிவு செய்தேன்.
ஆனாலும் இந்தத் தூர்வாரும் பணியை வரவேற்கிறேன். முதல்வரின் நோக்கம் நிறைவேற வேண்டும். வண்டல் மண்ணை வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது. அரசே இந்த மண்ணை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.
100 நாள் சாதனை என பட்டியலிட்டிருப்பது ஜெயலலிதாவின் சாதனைகளை இருட்டடிப்பு செய்வதாக உள்ளது.
சொல்லும் அளவுக்கு பழனிச்சாமி தலைமையிலான அரசு எந்த சாதனையையும் செய்யவில்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago