புதுச்சேரி துணை நிலை ஆளுநர் புகார் தொடர்பான கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதிலளிக்க மறுத்து விட்டார். புதுவைக்குத் தனி மாநில அந்தஸ்து பெறுவது குறித்து விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
புதுவையில் ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, முதல்வர் ரங்கசாமி இடையிலான மோதல் விஸ்வரூபமெடுத்துள்ளது. காரைக்காலில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் முதன்முறையாக ஆளுநரை நேரடியாக விமர்சித்துப் பேசினார். ஆளுநர் பங்கேற்ற அரசு விழாவையும் புறக்கணித்தார். முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக் கும் விதத்தில் ஆளுநரும் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்தி ருந்த பத்திரிகையாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவைக்கு வந்த முதல்வரை நிருபர்கள் சந்தித்துத் துணைநிலை ஆளுநர் தொடர்பாக கேள்வி கேட்டனர். இதற்குப் பதிலளிக்க அவர் மறுத்து விட்டார்.
பின்னர் அவர் வீட்டருகே உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தவரிடம் “தி இந்து” சார்பில் பேசினோம்.
துணைநிலை ஆளுநர் நேரடியாகத் தாக்கி அறிக்கை விட்டுள்ளது பற்றி கேட்டதற்கு, அரசு நலத்திட்டங்களை இரண்டரை ஆண்டுகாலம் சிறப்பாகச் செயல் படுத்தி வருகிறது என்று மட்டும் கூறினார். ஆளுநர் குறித்த கேள்வியை அவர் தவிர்த்தார்.
மாநில வளர்ச்சிக்கு என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, மத்திய அரசால் புதுவையில் அனைத்து வளர்ச்சி திட்டமும் தடைபட்டன.தனிமாநில அந்தஸ்து கிடைத் தால் வளர்ச்சி திட்டங்களைச் சீராகச் செயல்படுத்தவும், நிதி நெருக்கடியைத் தவிர்க்க முடியும். இதற்காக இந்த மாதத்துக்குள் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி, அனைத்துக்கட்சி குழு வுடன் தில்லியில் பிரதமர், குடியரசுத்தலைவரைச் சந்திப் போம் என்றார்.
புதுவையில் விதிகளை மீறி அரசுத் துறைகளில் ஆள்கள் நியமிக்கப்பட்டு வருவதாகத் துணைநிலை ஆளுநர் கூறியது பற்றி கேட்டதற்கு, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 4000 பேரை எந்த முறையில் நியமித்தனர் என எதிர்க்கேள்வி எழுப்பினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago