சென்னை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி புதன்கிழமை அந்தமானை தாக்கிய நிலையில், சென்னை துறைமுகத்தில் இன்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தவண்ணம் உள்ளது.

இதனிடையே, நாகப்பட்டினம் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஒடிசாவில் நாளை மறுதினம் பைலின் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புயலின் தாக்கம் தமிழகத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். எனினும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE