6 ஆண்டுகளாக தொடரும் சமூகப்பணி- 25,000 ஏழை குழந்தைகளுக்கு இலவச யோகா பயிற்சி: சேவையாற்றும் வழக்கறிஞர்

By எல்.மோகன்

கிராமப்புற ஏழை மற்றும் மன வளர்ச்சி குன்றிய 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, இலவசமாக யோகா கற்றுக் கொடுத்துள்ள வழக்கறிஞர், சமூக ஆர்வலர்களின் கவனத்தைத் தன் பக்கம் திரும்பச் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், பாலப்பள்ளத்தைச் சேர்ந்தவர் எம்.கே.கண்ணன்(34). பத்மநாத புரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைச் சிறுவர்களுக்கு அவர்களது ஊர்களுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் சென்று யோகா சனம் கற்றுக் கொடுக்கிறார்.

ஓசையின்றி நடக்கும் இந்த சேவை குறித்து ‘தி இந்து’விடம் வழக்கறிஞர் எம்.கே.கண்ணன் கூறியதாவது:

குழந்தைகளுக்கு யோகாசனத் துடன், வெளிநாடுகளில் தற்போது பிரபலமாகி வரும் ‘Super brain Yoga’ எனப்படும் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

குண்டலினியில் இருந்து மூளை வரை நன்மை அளிக்கும் எளிய தோப்புக்கரண பயிற்சியும் கற்றுக் கொடுக்கிறேன்.

இயற்கை உணவு

அத்துடன் தினமும் ஒரு நேர மாவது முளைகட்டிய பயறு போன்ற இயற்கை உணவுகளை அவர்கள் உண்பதற்குப் பக்குவப் படுத்தி வருகிறேன். மது, புகைப் பழக்கத்தால் சமூகத்தில் ஏற்படும் சீரழிவுகளை எடுத்துக் கூறுவதால், அவற்றின் தீமைகள் குழந்தைகள் மனதில் வேரூன்றிவிடுகிறது.

யோகா பயிற்சி பெறும் குழந்தை கள் பண்புடனும், நற்சிந்தனை களோடும் முன்னேறி வருவதைப் பெற்றோரும் ஆசிரியர்களும் என்னி டம் பெருமையாக கூறுவார்கள். இதுவே, எனக்கு மேலும் உத்வேகத் தைக் கொடுக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் 25 ஆயிரம் குழந் தைகள் என்னிடம் யோகா கற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இவர் களில் பலர் மாநிலப் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளனர்.

2020-ம் ஆண்டு களுக்குள் குறைந்தது 1 லட்சம் ஏழைக் குழந்தைகளுக்காவது இலவச மாக யோகாசனம் கற்றுக் கொடுப்பது என முடிவெடுத் துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்