செட்டிநாடு அரண்மனைச் சொத்துகளைப் பத்திரப்படுத்தும் விதமாக தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் உயில் ஒன்றை எழுதும் முயற்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரது சுவீகாரப் புதல்வர் ஐயப்பன் என்ற முத்தையாவுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் அடுத்த கட்டத்தை எட்டி இருக் கிறது. செட்டிநாடு அரண்மனை சம்பந்தப்பட்ட வெலிங்டன் அறக் கட்டளையில் எம்.ஏ.எம்-விசுவாசி யான ஆறு.ராமசாமிதான் செயலா ளராக இருக்கிறார். இதன் புரவல ராக எம்.ஏ.எம். இருக்கிறார். எம்.ஏ.எம். மூலம் பணியில் சேர்க் கப்பட்டு, தற்போது முத்தையா வின் விசுவாசியாக இருக்கும் பழனியப்பன்தான் இந்த அறக் கட்டளையின் பொருளாளராக இருக்கிறார்.
அண்மையில், இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக செயலாளர் மூலம் வங்கிக் காசோலைகளை வழங்கி இருக்கிறார்கள். ஆனால், இந்தக் காசோலைகளுக்கு பணப் பரிவர்த்தனைகள் செய்யாமல் நிறுத்தி வைக்கும்படி பொருளாளர் பழனியப்பன், வங்கிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட சிக்கல்களை அடுத்து, காசோலை பணவர்த்தனைகளை நிறுத்தி வைத்ததற்கான காரணத்தைக் கேட்டு செயலாளர் ஆறு.ராமசாமி, பொருளாளர் பழனியப்பனுக்கு நோட்டீஸ் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அரண்மனையின் அண்மை நிகழ்வுகள் குறித்து ’தி இந்து’விடம் பேசிய அரண்மனைக்கு நெருக்க மான வட்டத்தினர் கூறியதாவது: சென்னையில் உள்ள ராணி மெய்யம்மை டவர்ஸ் அடுக்க கத்தில் சுமார் 250 வீடுகள் கட்டப் பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதில் 5 வீடுகளை மட்டும் விற் காமல் வைத்திருந்தார் எம்.ஏ.எம். ஆனால், அவருக்கே தெரியாமல் அந்த ஐந்து வீடுகளையும் விற்பனை செய்வதற்கு மொத்தமாக 95 லட்ச ரூபாய் முன் பணம் வாங்கி இருப்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.
இதில்லாமல், சென்னை யிலிருந்து மகாபலிபுரம் வரை சுமார் 4500 ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளனவாம். ஐம்பதுக்கும் மேற்பட்ட புதுப் புதுக் கம்பெனிகளின் பெயரில் இந்த நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் எதையும் எம்.ஏ.எம். விரும்பவில்லை. ஏற்கெனவே உள்ள செட்டிநாடு குழும நிறுவனங்களை திறம்பட நடத்தினாலே போதும் என்பது அவரது எண்ணம்.
இதனிடையே, தனக்குச் சொந்தமான சொத்துகளின் பட்டியலை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திய எம்.ஏ.எம்., இந்தச் சொத்துகளின் மீது ஆளுமை செலுத்த தன்னைத் தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதுபோல் அறிவிப்பு கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, அரண்மனைக்கு நெருக்கமான முன்னாள் நீதிபதி ஒருவரிடம் பேசிய சுவீகார புதல்வர் முத்தையா தரப்பினர், எம்.ஏ.எம். வசம் உள்ள சொத்துகளை தங்களிடம் கொடுத்துவிடும் படியும் அதற்கு ஈடாக 400 கோடி ரூபாயை மொத்தமாகவும் கூடுதலாக மாதம் ஒன்று அல்லது இரண்டு கோடி ரூபாயையும் அவருக்கு தருவதாகவும் பேசி இருக்கிறார்கள்.
இதைக் கேட்டு எம்.ஏ.எம். கொதிப்படைந்திருக்கிறார். இதையடுத்துதான் தனது சொத்துகள் தொடர்பாக அவர் உயில் எழுதும் முடிவுக்கு வந்திருக்கிறார். ஏற்கெனவே, எம்.ஏ.எம்-மின் அப்பச்சி (தகப்பனார்) முத்தையா செட்டியார் எழுதி வைத்திருக்கும் உயிலில், ‘தனக்குப் பிறகு இந்த அரண்மனைக்கு மரபுப்படி வாரிசாக வருபவர்கள் மட்டுமே அரண்மனை சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியும்’ என்று எழுதி வைத்திருப்பதாகத் தெரிகிறது. அந்த உயிலை கையில் எடுத்தாலே முத்தையாவுக்கு சிக்கல் வரும். இந்த நிலையில் தனது சொத்துகள் தொடர்பாக எம்.ஏ.எம். எழுத தீர்மானித்திருக்கும் உயிலும் முத்தையாவுக்கு பாதகமாகத்தான் இருக்கும். இவ்வாறு அரண்மனை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago