கடந்த 2015 மே 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ என்ற விபத்துக்கான காப்பீட்டுத் திட்டத்தையும், ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையும் தொடங்கிவைத்தார். ரூ.2 லட்சம் காப்பீடு கொண்ட பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் மாதம் ரூ.1 வீதம், வருடத்துக்கு ரூ.12 பிரீமியம் செலுத்த வேண்டும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள், ஆண்டுக்கு ரூ.330 பிரீமியமாக செலுத்த வேண்டும். இரு காப்பீட் டுத் திட்டத்திலும் முறையே ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெற முடி யும்.
இந்த காப்பீட்டுத் திட்டங்களுக் கான பிரீமியம் தொகையை எளிதாக செலுத்துவதற்காக சுரக்ஷா என்ற வைப்புத் திட்ட மும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் படி, ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ என்ற விபத்து காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் 12 ரூபாயை செலுத்த ரூ.201 வைப் புத் தொகையாகவும், ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் 330 ரூபாயை செலுத்த ரூ.5,001 வைப் புத் தொகையாக செலுத்த வேண் டும். இந்த வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டு பிரீமியத் தொகை செலுத்த வழிவகை ஏற்படுத்துப்பட்டுள்ளது.
வங்கிகளில் சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனை வரும் இந்தத் திட்டத்தில் இணைய லாம். இதற்கான விண்ணப்பத் தையும் அந்தந்த வங்கிக் கிளை களில் பெற்று வாடிக்கையாளர்கள் செலுத்தலாம் என்று அரசு அறி வித்துள்ளது.
ஆனால் பெரும்பாலான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கிராமப்புற வங்கிகளிலும் இந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. இந்த காப் பீட்டுத் திட்டங்கள் பற்றி வாடிக் கையாளர்களிடம் தெரிவிக்க வங்கி நிர்வாகங்கள் முன்வருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும், சில வங்கிகளில் இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாமல் பல அதிகாரிகள் இருக்கின்றனர். இந்தத் திட்டம் கடந்த ஆண்டு டன் முடிந்துவிட்டதாகவும் சொல் கிறார்கள்.
இது தொடர்பாக கடலூர் குடி யிருப்போர் அனைத்து நலச்சங்க செயலாளர் மருதவாணன் கூறும் போது, “இது நல்ல திட்டம், ஒருசில வங்கிகளைத் தவிர பெரும்பாலான வங்கிகளில் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படவில்லை என் பதே உண்மை. தனியார் வங்கி கள் இதுகுறித்து பேசுவதே கிடையாது. இந்தத் திட்டம் இப் போதும் செயல்பாட்டில் இருப்ப தால், வங்கி அதிகாரிகளை வற் புறுத்தி இந்தத் திட்டத்தில் ஒவ் வொருவரும் சேர்வது அவசியம்” என்றார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலா ளர் ஆண்ட்ரூ ஐயாசாமியிடம் கேட்டபோது, “இத்திட்டம் தற் போதும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் முதல் மே மாதம் வரையில் இத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதற்கென ஆலோசகர்களும் உள்ளனர்.
இருப்பினும் வங்கிகளில் மேலாளர்களுக்கு கடுமையான பணிச் சூழல் காரணமாக ஒருசில இடங்களில் குறைபாடு இருக்கலாம். மற்றபடி இத்திட்டத் துக்கான விண்ணப்பப் படிவத் தினைப் பூர்த்தி செய்து கொடுத் தாலே, வங்கிகளில் அதைப் பெற் றுக் கொள்வர். இதற்கென உருவாக் கப்பட்டுள்ள http://jansuraksha.gov.in/Files/PMJJBY/English/ApplicationForm.pdf#zoom=250 என்ற இணைய முகவரி மூலமாக வும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago