மதுரை அவனியாபுரம் ஜல்லிக் கட்டில் இதுவரை இல்லாத வகை யில் 888 காளைகள் களமிறங்கு கின்றன. அவற்றை அடக்க 1,800 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். ஒரே நேரத்தில் இவ்வளவு மாடுபிடி வீரர்களை களம் இறக்க முடியாது என்பதால் குழுவாக இறக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக் கட்டு நடந்தாலும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங் காநல்லூரில் நடக்கும் ஜல்லிக் கட்டில் தென் தமிழகம் முழுவதும் இருந்து மாடுபிடி வீரர்கள், காளைகள் பங்கேற்பதால் மிகவும் விறுவிறுப்பாகவும், பார்க்க ஆர்வ மாகவும் இருக்கும். நீதிமன்ற தடையால் ஏற்பட்ட இழுபறிக்கு பின்னர் தற்போது மாணவர்கள் போராட்டம் காரணமாக அவசர சட்டம் இயற்றப்பட்ட பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால் மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக் கட்டுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அவனியாபுரத்தில் இன்று (பிப். 5) நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாத புரம், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் தமிழக ஜல்லிக்கட்டு கிராமங்களில் இருந்து ஏராளமான காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மதுரையில் திரண்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு முந்தைய நாள் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி வழங்கினால் அந்த காளைகள் களத்தில் சுறுசுறுப்பாக செயல்படும். அடக்க வருவோரை திமில்களை உதறிக்கொண்டு பந்தாடும் என கூறப்படுகிறது. அதனால், நேற்று அவனியாபுரம் கண்மாயில் ஏராளமான காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் நீச்சல் பயிற்சி அளித்தனர். அதனால், அவனியா புரம் ஊரே காளைகள், காளையர் கள் நடமாட்டமாக இருந்ததால் ஜல்லிக்கட்டு விழா களைகட்டி யிருந்தது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற் காக காளைகள், மாடுபிடி வீரர்களை முன்பதிவு செய்து அடையாள அட்டை, டோக்கன் வழங்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. கடைசி நாளான நேற்று முன்பதிவு செய்ய அவனியாபுரத்தில் ஏராள மான மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் நீண்ட வரிசை யில் நின்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 400 முதல் 500 காளைகள் வரையே அதிகபட்சமாக இதுவரை பங்கேற்றுள்ளன. அதுபோல், மாடுபிடி வீரர்களை பொறுத்த வரை 450 நபர்களே களமிறங்கி உள்ளனர்.
ஆனால், இந்த ஆண்டு 895 காளைகள் ஜல்லிக்கட்டில் பங் கேற்க முன்பதிவு செய்யப்பட்டன. இதில் 7 காளைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். காளை களை அடக்க மாடுபிடி வீரர்கள் 1,800 பேர் பதிவு செய்தனர்.
இதுவரை இல்லாத வகையில் மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப் போர் ஆர்வமடைந்துள்ளதால் அவனியாபுரத்தில் 2 இடங்களில் நேற்று கடைசிகட்ட முன்பதிவுகள் நடந்தன. போலீஸார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் அளவுக்கு காளைகள், மாடுபிடி வீரர்கள் முன்பதிவு நடந்தது. மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கை 1,800 ஆக இருப்பதால் இவர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைத்தால் காளைகளுக்கு பாதிப்பு ஏற்படும். காளைகள் மிரளவும், உற்சாக மிகுதியில் மாடுபிடி வீரர்கள் அவற்றை துன்புறுத்தவும், போட்டியை ஒழுங்குபடுத்துவதில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களை தனித்தனி குழுவாக களத்தில் இறக்கும் திட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குவிந்து வருவதால் மதுரை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago