கோவை: குளிர்பான பாட்டிலில் பிளாஸ்டிக் குப்பைகள்

By செய்திப்பிரிவு

குளிர்பான பாட்டிலில் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தது குறித்து பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை, டவுன்ஹால் வெரைட்டிஹால் சாலை பகுதியில் சி.எம்.சி காலனியில் வசித்து வருபவர் பானுமதி. இவர் செவ்வாய்க்கிழமை அருகில் உள்ள மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கச் சென்றுள்ளார். அதில் பிளாஸ்டிக் கழிவுகள் மிதப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் கூறுகையில், குளிர்பான பாட்டிலில் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தது குறித்து கடைக்காரரிடம் கேட்டபோது, பழைய குளிர்பானங்களை நாங்கள் விற்பதில்லை. நிறுவனத்திலிருந்து வந்ததை அப்படியே விற்கிறோம் என்றார். அதைத் தொடர்ந்து குளிர்பான டீலரிடம் கேட்டபோது, எதுவும் செய்யமுடியாது. நீதிமன்றம் சென்றால் வீண் செலவு என்றார். கடைக்காரரிடம் குளிர்பானம் விற்பனை செய்ததற்கான ஆதாரமாக கையொப்பம் பெற்று, பாட்டிலை திறக்காமல் வைத்துள்ளோம்.

வெரைட்டிஹால் சாலை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்துள்ளோம். உணவு தரக் கட்டுப்பாட்டு அலுவலகத்திலும், அதைத் தொடர்ந்து புதன்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள நுகர்வோர் கூட்டத்திலும் புகார் செய்ய உள்ளோம்.

சமீபத்தில் கடலூரில் குளிர்பானம் அருந்திய சிறுமி உயிரிழந்ததாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து கோவையில் குளிர்பானத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்