இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் அந்நாட்டு கடற்படை இல்லை. அதனால்தான், தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி:
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து மேற் கொண்ட நடவடிக்கையால், இந்திய - இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னையில் நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டு, அந்த முடிவுகளை இருநாட்டு அரசுகளும் பரிசீலனை செய்து ஒத்த கருத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மேலும், 2-ம் கட்ட பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்துவது எனவும், அதுவே நிறைவு தரும் பேச்சாக அமையும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இலங்கை கடற்படை அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இல்லாததால் மீண்டும் இரண்டு முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தை நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கை சுமுகத் தீர்வுக்கு இடையூறாக அமையும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். அடுத்த பேச்சுவார்த்தை சுமுகமாக அமையும்.
இது மீனவர்களின் வாழ்வா தார பிரச்சினை என்பதால் எச்சரிக்கை யுடன், அதேநேரத்தில் வலுவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் மக்க ளுக்கு பயன்தரக்கூடிய பல முக்கிய மசோதாக்களை அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுகின்றன.
மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையும். கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை சரியான நேரத்தில் அறிவிக்கும். தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில், விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப் படும்” என்றார்.
கேந்திரிய வித்யாலயம்
முன்னதாக, தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக விழாவில் பங்கேற்று பேசுகையில், “தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயம் பள்ளி அமைக்க தேவையான நிலத்தை வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வழங்கும்” என்று அறிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago