ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் கு.பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.நாராயணன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
பின்னர், வெளியே வந்த அவர்கள், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆம் ஆத்மி கட்சியின் மாநில, மாவட்ட அலுவலகம் அமைந்தகரையில் ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கீழ்பாக்கத்தில் 2 வாரங்களுக்கு முன்பாக கிறிஸ்டினா சாமி போட்டியாக ஒரு அலுவலகத்தை தொடங்கினார்.
அமைந்தகரை அலுவலகத்தை காலி செய்வதற்கு முன்பு, கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை. 6 மாத வாடகையையும் கொடுக்க வில்லை. சாவியைக்கூட ஒப்ப டைக்கவில்லை. அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.
கட்சியின் வரவு-செலவு கணக்குகளை உடனடியாக மாநில செயற்குழுவில் வைக்க வேண்டும். கட்சி நடவடிக் கைகளில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்.
நன்கொடை விவரங்களை உடனடியாக ஆன்லைனில் வெளி யிட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை திசை திருப்புவதற்காகத்தான் கடந்த வாரம், எங்கள் மீது கிறிஸ்டினா சாமி புகார் கொடுத்துள்ளார் என்று மனுவில் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago