ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளில் களமிறங்கும் வழக்கறிஞர் குழு: இலவசமாக சட்ட உதவி வழங்க முடிவு

By கி.மகாராஜன்

தமிழகம் முழுவதும் ஜல்லிக் கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கைது உள்ளிட்ட போலீஸாரின் நடவடிக்கைக்கு ஆளானவர் களுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்குவதற்காக 50 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு களமிறங்கி உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் 7 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதை யடுத்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ஐ திருத்தம் செய்து தமிழக சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற் றப்பட்டது.

ஜல்லிக்கட்டு போராட்டம் ஜன. 23-ல் முடிவுக்கு வந்த நிலையில், போராட்டம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்ட வர்களை ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள், வீடியோ பதிவு களின் அடிப்படையில் போலீஸார் கைது செய்து வருகின்றனர். பலரை தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.கனகவேல், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற் றப்பட்ட பின், முடிவடைய இருந்த போராட்டத்தில் போலீஸார் தாக்கு தல் நடத்தியதால் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து போராட் டத்தில் கலந்துகொண்டவர்கள், உதவி செய்தவர்கள் என பலரை போலீஸார் வீடு வீடாகச் சென்று கைது செய்து வருகின்றனர்.

போலீஸாரின் நடவடிக்கையால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்க 50 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு அமைத்துள் ளோம். ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் தொடர்பாக சட்ட உதவி வேண்டுவோர் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அறை எண் 96-ல் வழக்கறிஞர்களை அணுகலாம்.

வன்முறை நடைபெற்ற பகுதிகளை நேரில் பார்வையிட்டு விவரங்கள் சேகரித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து வருகிறோம். விரைவில் சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் கோரியும். போலீஸார் தேடி வருபவர்களுக்கு முன்ஜாமீன் கோரியும், போலீஸார் தாக்கியதில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு கோரியும் சம்பந்தப்பட்ட நீதிமன் றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படும்.

பொது விசாரணை

போராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்களை போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் சிறையில் அடைத்துள்ளனர். அவர் களுக்கு சிகிச்சை அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரிபரந்தாமன் ஆகியோர் முன்னி லையில் அலங்காநல்லூரில் பொது விசாரணை நடத்த முடிவு செய்துள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்