விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் ஆயிரம் பேர் குறைந்துள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 52 ஆயிரத் துக்கும் மேற்பட்ட அரசுப் பள் ளிகள் இயங்கி வருகின்றன. இதில் பல லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு சத்துணவு, சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், இலவச பஸ் பாஸ், மடிக்கணினி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப அரசுப் பள்ளிகள் தரம் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருவது மறுக்க முடியாத ஒன்று.
விருதுநகர் மாவட்டத்தில் 984 அரசு தொடக்கப் பள்ளிகள், 227 நடுநிலைப் பள்ளிகள், 132 உயர்நிலைப் பள்ளிகள், 145 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி களில் நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 992 மாணவ, மாணவி களும், அரசு உயர்நிலை, மேல் நிலை பள்ளிகளில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 260 மாணவ, மாணவி களும் பயின்று வருகின்றனர்.
மாவட்டத்தில் 2013-14ம் கல்வி ஆண்டில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 லட் சத்து 24 ஆயிரத்து 906 மாணவ, மாணவிகள் பயின்றனர். முந்தைய கல்வி ஆண்டைவிட நடப்பு கல்வி ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை 914 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனியார் பள்ளி களில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் கூறியபோது, ‘‘அரசுப் பள்ளிகளில் மாணவர் களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினாலும், கற்றல் மற்றும் கற்பித்தல் ஆற்றல் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் குறைவாகவே உள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகம் என்றாலும் ஒவ்வொரு மாணவர் மீதும் ஆசிரியர்களால் தனி கவனம் செலுத்தப்படுகிறது. படிப்பு தவிர பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளில் அதுபோன்ற வாய்ப்புகள் இல்லை’’ என்றனர்.
இதுகுறித்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக் குமார், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோர் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் மாணவர் களின் சேர்க்கையை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவி கள், கல்வி உதவித் தொகை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கிராமங்களில் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரு கின்றனர்.
அதுமட்டுமின்றி, பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலம் அந்தந்த பள்ளிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோரை சந்தித்து, அவர்களது குழந்தை களை அரசுப் பள்ளியிலும், அரசுப் பள்ளியில் இயங்கும் ஆங்கில வழிக் கல்வி வகுப்பிலும் சேர்க்குமாறு எடுத்துரைத்து வருகிறோம்.
மேலும், அரசுப் பள்ளியில் படித்து முடித்த மாணவர்கள் மூலம் தங்கள் வீடுகளிலும் அருகில் உள்ள வீடுகளிலும் வசிக்கும் பெற்றோரிடமும் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கக்கோரி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப் படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியபோது, ‘‘அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவதற்குக் காரணம் அப்பள்ளிகள் மீது பெற்றோருக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை என்பதே. தங் களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு அடுத்தவரின் பிள்ளைகளை மட்டும் அரசுப் பள்ளியில் சேர ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சி பலன் கொடுக்காது. எனவே, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை கட்டாயம் அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற ஆணையை அரசு இயற்ற வேண்டும். அப்போது தான் அப்பள்ளிகள் மீதுள்ள நம்பிக்கையும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரிக்கும்’’ என்கின்றனர்.
பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்
அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதாக எழுந்துள்ள புகார் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனிடம் கேட்டபோது, "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு, சீருடை, புத்தகப்பை, காலணி, மிதிவண்டி என 14 விதமான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது. இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. மாணவர்களை படிப்பை இடையில் நிறுத்துவதும் குறைந்திருக்கிறது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு உதாரணம்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago