நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை கைகழுவும் தே.மு.தி.க?: மத்திய அரசை கண்டித்து பொதுக்குழுவில் தீர்மானம்

By எஸ்.சசிதரன்

மாநிலங்களவை தேர்தலில் கடைசி நேரத்தில் கைவிட்ட காங்கிரஸ் கட்சியுடன் நாடாளுமன்ற தேர்த லில் கூட்டணியை தவிர்க்கும் வகையில் தே.மு.தி.க பொதுக் குழுவில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்றால் பெரிய பலன் கிடைக்காது என்று தமிழக கட்சிகள் தெளிவாக உணர்ந்துள்ள நிலையில், கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் பல்வேறு கட்சி களின் மூத்த பிரமுகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க, தற்போது கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய பழைய தோழமை கட்சிகளுடனேயே நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.

ஆளும்கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் பிரச்சினை கள் எதுவும் பெரிய அளவில் இல்லை என்று அக்கட்சித் தலைமை கருதுவதே இதற்குக் காரணம்.

ஆனால், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பா.ம.க. போன்ற கட்சிகள் இன்னமும் கூட்டணி கதவைத் திறந்து வைத்து, சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழக கட்சிகளைப் பொருத்தவரை தனது நிலைப்பாட்டினை முதன் முதலில் வெளியிட்டது தி.மு.க. மட்டுமே. கடந்த மாதம் 15-ம் தேதி நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், காங்கிரஸுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கிடையாது என்று அக்கட்சித் தலைவர் மு. கருணாநிதி அறிவித்தார். அடுத்து சில நாட்களில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் தனித்துப் போட்டியிடுவது பற்றி யும், கூட்டணி பற்றியும் பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி

இதற்கிடையே, தி.மு.க கூட்டணிக்கு, தே.மு.தி.க வந்தால் மகிழ்ச்சி என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே கருத்தை பொரு ளாளர் மு.க.ஸ்டாலினும் கோவையில் ஞாயிற்றுக்கிழமை வெளிப்படையாகவே ஆமோதித் துள்ளார். தொகுதி பங்கீடு மட்டுமே இருகட்சிகளும் கூட்டணி சேருவதற்கு சிறிய தடையாக இருப்பதாக இருகட்சிகளை யும் சேர்ந்த பிரமுகர்கள் கூறு கின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுக்கூட்டத்தின் முடி விலும், அக்கட்சித் தலைமை, கூட்டணி பற்றிய முடிவை சாதுரியமாக அறிவிக்காமல் இருந்துவிட்டது. ஆனால், சமீப கால அரசியல் நிலையை ஆராய்ந்து பார்த்தால், தி.மு.க. அல்லது பா.ஜ.க. போன்ற கட்சிகளுடனேயே, கூட்டணி வைத்துக் கொள்ள அக்கட்சி அதிகம் விரும்புவதாக தெரிகிறது. ஒருவேளை மற்ற கட்சிகள் கைவிரித்துவிட்டால் மட்டுமே காங்கிரஸின் பக்கம் பா.ம.க. கவனம் திரும்பக்கூடும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் தேர்தலில் தனித்து நின்றால் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி உறுதி என்ற நிலையில், மற்ற கட்சிகள் கைவிட்ட போதிலும், தே.மு.தி.க.வை காங்கிரஸ் கட்சி மலை போல் நம்பிக் கொண்டிருந்தது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் விஜயகாந்தை மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் நேரில் போய் பார்த்தார்.

இந்நிலையில், பொன்னேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுக் கூட்டத் தில், அ.தி.மு.க.வை கடுமையாக விமர்ச்சித்துள்ள அதே நேரத்தில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம்

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப வாங்கிக் கொள்வதை 9- ஆகக் குறைத்து, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல், மானியம் இல்லாத சிலிண்டர்களின் விலையை 220 ரூபாய் உயர்த்தியதையும், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் திரவ ஆட்டோக்களின் எரி பொருள் விலையை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியதையும் தே.மு.தி.க வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதுவே, தே.மு.தி.க-வின் கூட்டணி நிலைப்பாடு பற்றிய சந்தேகங்களை பெருமளவுக்கு தீர்த்து வைத்துள்ளது என்றே கருதலாம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதை அக்கட்சித் தலைமை விரும்பாததையே இது காட்டுவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஏன்?

கடந்த ஆண்டு நடைபெற்ற மேல் சபை தேர்தலின்போது, பல முறை முயற்சி செய்தும், காங்கிரஸ் கட்சி திடீரென, திமுக-வுக்கு ஆதரவாக மாறியதும், சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததும் தே.மு.தி.க பொதுக்குழுக் கூட்டத்திலும், இதற்கு முன்பாக நடைபெற்ற வேறு சில கூட்டங்களிலும் தொடர்ந்து எதிரொலித்ததன் விளைவாகவே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அக்கட்சியினர் கூறினர்.

எனினும், இது பற்றிய உறுதியான முடிவை பிப்ரவரி 2-ம் தேதி விழுப்புரம் மாநாட்டில் அறிவிப்பாக விஜயகாந்த் வெளியிடுவார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வை கடுமையாக விமர்ச்சித்துள்ள அதே நேரத்தில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்