மாநகராட்சி ஆகிறது தஞ்சாவூர், திண்டுக்கல்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

By எஸ்.சசிதரன்

தமிழகத்தில் தற்போது சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருநெல் வேலி, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகராட்சிகள், கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தின்போது மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

கடந்த பட்ஜெட் கூட்டத் தொட ரின்போது, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப் படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த 2 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோ தாக்களை தமிழக சட்டப் பேரவை யில் திங்கள்கிழமை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தாக்கல் செய்தார்.

அந்த மசோதாக்களில், “மக்கள் தொகை அதிகரித்தல், ஆண்டு வருமானத்தில் முன்னேற்றம் மற்றும் மக்கள்தொகை பெருக்கத் துக்கேற்ப அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு வகை செய்யப்பட வேண்டிய குடிமைப் பணிகளின் அளவீட்டையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம் படுத்துவதைக் கருத்தில் கொண்டு தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல் வர் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்திருந்தார். மேற்சொன்ன அறிவிப்புகளுக்கு வடிவம் கொடுப்பதற்காக, 1981-ம் ஆண்டு கோவை மாநகராட்சி சட்டத்தின் வகைமுறைகளைத் தழுவி ஒரு சிறப்புத் திட்டத்தினை இயற்றுவதென அரசு முடிவு செய்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. 2 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படுவதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மாநக ராட்சிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்கிறது.

இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த சட்டம் நிறைவேறியதும் தஞ்சாவூர், திண்டுக்கல் நகராட்சி கள், மாநகராட்சிகளாக தரம் உயர்ந்துவிடும். அந்த நக ராட்சிகளின் தலைவர்கள் மேயராக வும், துணைத் தலைவர்கள் துணை மேயராகவும் அழைக்கப்படுவர். இதுகுறித்து அரசு அறிவிக்கை வெளியிடும் வரை அவர்கள் அப்பதவியில் இருக்கலாம் அல்லது பதவிக்காலம் முடியும் வரை அப்பதவியில் இருக்கலாம்.

புதிய மாநகாரட்சிப் பகுதி களுக்கு அதிக பணியாளர்கள் நியமிக்கப்படுவர். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெருந்தொகை நிதியாக ஒதுக்கப்படும். இதன் மூலம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பெருகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்