சாக்கு கிடங்கு சுவர் இடிந்து விழுந்து கோயில் பூசாரி உட்பட 3 பேர் பலி: மேட்டுப்பாளையத்தில் சோகம்

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம் மேடர் பிள்ளை யார் கோவில் வீதியில் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்புப் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது.

கோயிலின் பூசாரியான பழனிச் சாமி மறுநாள் பூஜைக்காக கோயில் வெளிப் பகுதியில் ஒரு அறையில் திங்கட்கிழமை இரவு உறங்கியுள் ளார். அவருடன் குமார், சோமசுந்த ரம், மணிகண்டன், பிரபாகரன், செந்தில் ஆகியோரும் உறங்கி யுள்ளனர். மேட்டுப்பாளையத்தில் பெய்து வரும் மழையால் கோயிலையொட்டி இருந்த சாக்கு கிடங்கின் சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்ததில், 6 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

காலை 6 மணி அளவில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, சுவர் இடிந்து விழுந்து ஆட்கள் சிக்கியிருப்பது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து இடிபாடுகளை அகற்றியபோது பூசாரி பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. மற்ற 5 பேரும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களில் பிரபாகரன், குமார் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர். மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேட்டுப்பாளை யம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்