அதிமுக இளைஞர் பாசறையில் மாணவ –மாணவிகள் சேர்க்க வேண்டும்: விருதுநகர் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல்

By இ.மணிகண்டன்

தமிழக அரசு வழங்கிய லேப் டாப், சைக்கிள் உள்ளிட்ட சலுகைகளை பெற்ற மாணவ - மாணவிகளை இளைஞர் - இளம்பெண்கள் பாசறையில் சேர்க்க அதிமுக புதிய திட்டம் வகுத்து வருகிறது.

விருதுநகரில் இளைஞர் - இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் பாசறையின் மாநிலச் செயலரும் எம்.பி-யுமான ப.குமார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய குமார், ’’அம்மா அரசு மாணவ- மாணவிகளுக்கு 14 வகையான சலுகைகளை வழங்கி வருகிறது. இதுவரை 95 லட்சம் மாணவ- மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களும், 22 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளும் வழங்கப் பட்டுள்ளன. தாலிக்குத் தங்கம் திட்டத்தின்மூலம் இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரம் இளம்பெண்கள் பயனடைந்துள்ளனர். நமது அரசின் நலத் திட்டங்களால் அதிகம் பயனடைந்தது மாணவ - மாணவிகளும் இளைஞர்களும் தான். இதையெல்லாம் எடுத்துச் சொல்லி அந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை எல்லாம் பாசறையில் உறுப்பினராக்க வேண்டும். இந்தமுறை முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்கள் - இளம் பெண்கள் வாக்குகளை நாம் பெறவேண்டும்’’ என்றார். கூட்டத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு பகுதியிலும் இதுவரை எத்தனை மாணவ- மாணவிகள், இளைஞர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுள்ளனர் என்ற பட்டியலைச் சேகரித்து வீடுவீடாகச் சென்று அவர்களை பாசறையில் உறுப்பினர்களாக சேர்க்கும்படியும் அதன் விவரங்களை தலைமைக்கு அனுப்பிவைக்கும்படியும் தனிப்பட்ட முறையில் பாசறை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்