விஜயகாந்த் வெற்றியை எதிர்த்து வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

By ஜா.வெங்கடேசன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எம்.ஜெயந்தி என்பவர் தாக்கல் செய்த இம்மனுவில், எம்எல்ஏ என்ற முறையில் விஜயகாந்துக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் இதர படிகளை நிறுத்தி வைக்கவேண்டும். சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க அவருக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இம்மனு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று பட்டியலிடப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா என்பதை தீர்மானிக்க, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ். மணியின் கருத்துகளை நீதிபதிகள் கேட்டறிந்தனர். இதையடுத்து இம்மனு மிகவும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி தள்ளுபடி செய்தனர்.

விஜயகாந்த்தின் தேர்தல் வெற்றி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இம்மனுவை ஜெயந்தி தாக்கல் செய்திருந்தார்.

2011-ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் எம்.ஜெயந்தியும் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார். “தேர்தல் அதிகாரியின் இந்த செயல் தன்னிச்சையானது, சட்டவிரோதமானது. முன்னதாக நான் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தபோது அடையாளம் தெரியாத சிலர் எனது மனுவை பறித்து கிழித்தெறிந்தனர். அவர்கள் விஜயகாந்தின் ஆதரவாளர்கள். எனவே விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயந்தி மனு தாக்கல் செய்தார்.

ஜெயந்தியின் மனு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இல்லை. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்த தேர்தல் அதிகாரியின் நடவடிக்கை சரிதான் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து ஜெயந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் “எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தேர்தல் அதிகாரி கூறவில்லை. இதனை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை” என்று கூறியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்