அரசு மற்றும் தனியார் பொதுக் கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தளப் பாதை உள்ளிட்ட சிறப்பு வசதிகளை 6 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவு, 10 மாதங்களாகியும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
பொதுக் கட்டிங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதி கள் செய்து தரப்படும் என்று 2011-12-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி மாநகராட்சி, நகராட்சி களில் உள்ள மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், நூலகம், மருத்துவமனை, தங்கும் விடுதி, திருமண மண்டபம், தியேட்டர், கேளிக்கை பூங்கா, நீச்சல் குளம், பொழுதுபோக்கு மையம், கலையரங்கம், கண்காட்சிக் கூடம், அருங்காட்சியகம், விளையாட்டுத் திடல், வங்கி ஏ.டி.எம்., காப்பீட்டு நிறுவனம், நகைக்கடை, ஓட்டல், ஷாப்பிங் மால், பஸ் நிலையம், பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் சிறப்பு வசதிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் பொதுக்கட்டிடங்களில் லிப்ட் மற்றும் படிக்கட்டு வரை மாற்றுத் திறனாளிகள் போவதற்கு வசதியாக சாய்தள பாதை, வீல் சேர் உள்ளே போய் திரும்பும் வகையில் பெரிய லிப்ட், வளர்ச்சி குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்காக மாடி படிக்கட்டில் 90 சென்டிமீட்டர், 75 சென்டி மீட்டர் உயர கைப்பிடிகள், சிறப்புக் கழிப்பிடம், கார் பார்க்கிங் ஆகிய வசதிகளை 6 மாதங்களில் செய்து முடிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அரசு உத்தரவிட்டது. ஆனால், 10 மாதங்க ளாகியும் இத்திட்டம் முழுமையாக முடிக்கப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் டி.எம்.என்.தீபக் கூறுகையில், “மிகக்குறைவான அரசு கட்டிடங்க ளில்தான் எங்களுக்கான வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், தனியார் கட்டிடங்களில் அந்தளவு கூட வசதி செய்து தரப்படவில்லை” என்றார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசுக்கு சொந்தமாக 8 ஆயிரத்து 274 கட்டிடங்கள் உள்ளன.
இதில் 7 ஆயிரத்து 639 கட்டிடங்க ளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்கள் லட்சக்கணக்கில் உள்ளன.
ஆனால், தனியார் கட்டிடங்களில் இந்தத் திட்டத்தின் செயலாக்கம், ஆமை வேகத்தில்தான் நடக்கி றது. இருப்பினும், தனியார் கட்டிடங்களில் இந்த வசதிகளை செய்து கொடுக்க கெடு எதுவும் விதிக்கவில்லை.
இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளும் சமூக த்தில் ஓர் அங்கம் என்பதை ஒவ்வொ ருவரும் உணர வேண்டும். மக்கள் பங்களிப்புடன்தான் இந்தத் திட்டத்தை முழுமையாக நிறை வேற்ற முடியும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago