நெல்லை மண்டலத்தில் 15ஆயிரம் பறவைகள்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய, நெல்லை மண்டலத்தில், 25-க்கும் மேற்பட்ட நீராதாரங்களில் நடத்திய 2-ம் கட்ட கணக்கெடுப்பில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

மண்டல வனப்பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா அறிக்கை:

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பறவைகளின் முக்கிய இருப்பிடமாக திகழ்கின்றன. இனப்பெருக்கத்துக்காக, உள்ளூர் மற்றும் அயல்நாடுகளில் இருந்து அதிகளவில் பறவைகள் இங்கு வருகின்றன. வனத்துக்கு வெளியே உள்ள குளங்கள், மக்களால் பாதுகாக்கப்படும் பகுதிகள், கருவேல்மரங்கள் சூழ்ந்த இடங்களில், பறவைகள் அதிகம் காணப்படுகின்றன.

குளிர்காலம் மற்றும் பறவைகள் இடம்பெயரும் காலங்களில், அவைகளைக் கண்காணித்து கணக்கெடுக்கும் பணியை வனத்துறை தொடங்கியுள்ளது. இதன்படி, 2-ம் கட்ட கணக்கெடுப்பு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம், தேரூர், உப்பளம், மணக்குடி கழிமுகப்பகுதி, ராஜாக்கமங்கலம் குளங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜவல்லிபுரம், வாகைகுளம், பிராஞ்சேரி, கூந்தன்குளம், காடன்குளம், நயினார்குளம், திருப்புடைமருதூர், பருத்திவைகுளம், அரியகுளம், சாரல்குளம், வடக்கு விஜயநாராயணம் குளங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் வடக்கு கால்வாய், பெருங்குளம், வேப்பலோடை வேம்பார், கருங்குளம் மற்றும் கடம்பகுளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நீராதாரங்களில் கணக்கெடுப்பு நடந்தது. கணக்கெடுப்பில் பெலிக்கன், பட்டைத்தலை வாத்து உள்ளிட்ட 40 வகையான 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டன. அடுத்த கணக்கெடுப்பு, 25.1.14-ம் தேதி நடைபெறவுள்ளது, என்றார்.

திருநெல்வேலி அருகே ராஜவல்லி புரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை மண்டல வனப்பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, மாவட்ட வன அலுவலர் சி.எச். பத்மா, உதவி வனப்பாதுகாவலர் காஞ்சனா தொடங்கி வைத்தனர். மாவட்ட வனஅலுவலக தொழில்நுட்ப உதவியாளர் கந்த சாமி, வனக்காப்பாளர் பால்ராஜ் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்