கோடை வெப்பம் கடுமையாக இருக்கும்: பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவு

By ச.கார்த்திகேயன்

வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்

வரும் கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந் திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ள தாக வருவாய் நிர்வாக ஆணை யர் கொ.சத்யகோபால் தெரி வித்துள்ளார்.

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரனிடம் கேட்டபோது, “தமிழகத்தை பொறுத்தவரை, வரும் கோடை யில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும். உள் மாவட்டங்களான திருச்சி, தருமபுரி, வேலூர் போன்ற இடங்களில் அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது” என்றார்.

இதுதொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபாலிடம் கேட்ட போது, “அந்தந்த மாவட்டங்களில், நிலவும் வெப்பநிலைக்கு ஏற்ப, மக்கள் என்ன செய்ய வேண்டும் ? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது” என்றார்.

கடந்த இரு ஆண்டுகளாக கோடை காலத்தில், வெப்பம் அதிகரிப்பது தொடர்பாக சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மக்கள்தொகை பெருக்கத் தால், வளர்ச்சி என்ற பெயரில் நாடு முழுவதும் பசுமை அழிக்கப் படுகிறது. வானளாவிய கட்டிடங் கள் கட்டப்படுகின்றன. சூரியனிட மிருந்து வரும் வெப்பக் கதிர்களை மரங்கள் உள்வாங்கிக்கொண்டு, பிரதிபலிக்காது. ஆனால் கட்டிடங்கள் பிரதிபலிக்கும். இதனால் வெப்பம், வழக்கத்தை விட 1 அல்லது 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகிறது. பருவநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரிப்பது உண்மை. வெப்பம் அதிகரிப்பதால், வெப்பக் காற்று வீசுதல், அதனால் ஏற்படும் உடல்நலக் குறைவு, நீர்நிலைகள் வற்றி நிலம் வறண்டு போதல், குடிநீர் தட்டுப்பாடு போன்ற அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

என்ன செய்ய வேண்டும்?

வெப்பம் அதிகரித்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு, தமிழக அரசு வழங்கிய அறிவுரைகள் வருமாறு: வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள, அவசிய தேவைகள் இன்றி வெயிலில் செல்ல வேண்டாம். குறிப்பாக பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும். அந்த நேரத்தில் அதிக அளவில் களைப்படைய வைக்கும் பணிகளை செய்ய வேண்டாம். நன்கு தண்ணீர் பருக வேண்டும். காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை பார்க்கிங் செய்துள்ள வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் வெளியே செல்ல நேரும்போது, உடன் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். கழுத்து மற்றும் கை கால்களை சிறிது ஈரமான துணியினால் மூடி செல்ல வேண்டும். தொப்பி அல்லது குடை எடுத்துச் செல்லலாம். டீ, காபி போன்ற பானங்களை தவிர்த்து மோர், கஞ்சி மற்றும் பழச்சாறு போன்ற பானங்களை அருந்தலாம். கால்நடைகளை நிழலான இடங்களில் தங்க வைத்து, தேவையான தண்ணீர் வழங்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்