என்எல்சியில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் சிஐடியு தொழிற்சங் கத்துக்கு ஆதரவாக தொழிலாளர் களிடம் வாக்கு சேகரிப்பதற்காக நெய்வேலிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘தி இந்து’விடம் பேசியதாவது:
தேமுதிக - மக்கள் நலக் கூட் டணியின் செயல்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல போதுமான அவகாசம் இல்லை. அதனால் எங்கள் கூட்டணிக்கு தோல்வி ஏற்பட்டது. எங்களது கால அவகாசமின்மையை பயன்படுத்தி அதிமுக, திமுக இரு கட்சிகளும் பண பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளன.
அதிமுக, திமுக ஆகிய கட்சி களிடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. எனவே இந்த கட்சி களுக்கு எதிரான மாற்று அரசியல் அவசியமாகிறது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், மக்கள் நலக் கூட்டணியில் நீடிப்பது தொடர்பாகவும் இன்று சென்னையில் நடைபெற உள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் 1971 முதல் 1977-ம் ஆண்டு வரை யிலான காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உறுப்பினர்கள் இல்லாத நிலை இருந்துள்ளது. தற்போது சட்டப்பேரவையில் எங்கள் குரல் ஒலிக்கவில்லை என்றாலும் மக்களுக்கான போராட்டம் தொடரும்.
அதிமுக அரசு மீண்டும் பொறுப் பேற்றுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு ஏட்டளவிலேயே உள்ளது. கூலிப்படையினர் கொட்டம் அதி கரித்திருக்கிறதே தவிர அவர் கள் ஒடுக்கப்படவில்லை. திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கை யில், லோக் ஆயுக்தா ஏற்படுத் தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கான செயல்பாடுகளில் விரைந்து இறங்க வேண்டும்.
கிரானைட் முறைகேடு தொடர் பாக விசாரணை மேற்கொண்ட ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இந்த முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பரிந்துரைத்திருக் கிறார். கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ தனது நிலைப்பாட்டை 4 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதேபோன்று தாது மணல் முறைகேடு தொடர்பாக ககன்தீப்சிங் பேடி விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார். இவ்விரு முறைகேடுகளையும் சிபிஐ விசாரிக்க அதிமுக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago