‘தி இந்து’, அகரம் அறக்கட்டளை, புதிய தலைமுறை இணைந்து ‘யாதும் ஊரே’ சார்பில் ‘பசுமை ஆவடி’ திட்டம் தொடக்கம்

By டி.எல்.சஞ்சீவி குமார்

அகரம் அறக்கட்டளை, புதிய தலைமுறை மற்றும் ‘தி இந்து’ இணைந்து நடத்தும் ‘யாதும் ஊரே’ நிகழ்வுகளின் அடுத்தக்கட்டமாக ‘பசுமை ஆவடி’ திட்டம் ஆவடி தொகுதியில் நேற்று தொடங்கியது.

கடந்த ஆண்டு டிசம்பர், ஜனவரி வெள்ளத்துக்கு பின்பு ‘யாதும் ஊரே’ சார்பில் சென்னையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத் தப்பட்டது. சீரழிந்துகிடக்கும் நீர்நிலைகளை புனரமைப்பது தொடர்பாகவும் நிகழ்ச்சியில் ஆலோசிக்கப்பட்டது. இதன் அடுத் தக்கட்டமாக, தற்போது ஆவடி தொகுதியை பசுமையாக்கும் திட்டம் மற்றும் ஆவடியின் நீர்நிலைகளை சீரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஆவடியின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆவடி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள், ஓவியர்கள், ‘யாதும் ஊரே’ சார்பில் தன் னார்வலர்கள் சுற்றுச்சூழல் ஓவியங்களை வரைந்து, பேருந்து நிலையத்தை அழகுப்படுத்தினர். பொது இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் 1,610 மரக்கன்றுகள் நடப்பட்டன. ‘மாற்று ஊடக மையம்’ கலைக்குழு மூலம் 50 கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆவடி தொகுதியில் உள்ள 120 பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் 2,493 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ‘பசுமை ஆவடி’ திட்டத்தின் தொடக்க விழா ஆவடியில் நேற்று நடந்தது. இதில் சுற்றுச்சூழலியலாளர்கள் சுல்தான் முகமது இஸ்மாயில், ஜெய வெங்கடேசன், நரசிம்மன், பூவுலகு சுந்தர்ராஜன், மருத்துவர் சிவராமன், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆகியோர் கலந்துக்கொண்டனர். சிறப்பு விருந்தினராக அகரம் அறக்கட்டளை சார்பில் நடிகர் சூர்யா கலந்துக்கொண்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

‘‘வீட்டில் அனைவரும் இயற் கையான முறையில் காய்கறி, தாவரங்களை வளர்க்க வேண்டும். செயற்கை உரங்களை தவிர்க்க வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மரம் வளர்க்க வேண்டும். சென்னையில் தினமும் குவியும் குப்பைகளை பிரித்து சரியான முறையில் திடக்கழிவு மேலாண்மை செய்தால் இயற்கையான உரம் கிடைப்பதுடன் சுற்றுச்சூழலும் மேம்படும். ஓட்ஸ் போன்றவற்றை தவிர்த்து, நமது பாரம்பரிய சிறு தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்று நிகழ்ச்சியில் பேசியவர்கள் தெரிவித்தனர்.

ஆவடி பகுதியின் பசுமையை மேம்படுத்த அரசு தரப்பில் இருந்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக திருவள் ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி கூறினார்.

ஆவடியில் 6 லட்சம் பேர் வசிக் கின்றனர். இதில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேராவது சுற்றுச் சூழலை பாதுகாக்க முன்வந்தாலே பசுமையான ஆவடியை உரு வாக்கிவிடலாம் என்று ஆவடி எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

நடிகர் சூர்யா பேசும்போது, ‘‘யாதும் ஊரே திட்டத்துக்கு ஆத ரவும் செயல் வடிவமும் கொடுத் தது இன்றைய இளைஞர்களே. எதிர்காலத்தில் அனைத்து மாண வர்களும் பசுமை ஆவடி திட்டத் துக்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். ஆவடி தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி பசுமை தொகுதியாக மாற்றிக்காட் டுவோம்’’ என்றார். நிறைவாக ஆவடியை பசுமை யாக்கவும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கவும் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்