சென்னை மெட்ரோ ரயில்: அதிகாரபூர்வ கால அட்டவணை, பயணிகள் கட்டணம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் ரயில் புறப்படும், வரும் நேரம் தொடர்பான கால அட்டவணையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொளி மூலம் தொடங்கிவைத்தார். 7 ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் பணிமனையையும் முதல்வர் திறந்துவைத்தார்.

கட்டண விவரம்:

மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருமடங்கு செலுத்த வேண்டும்.

*ஆலந்தூர் - ஈக்காட்டுதாங்கல்: ரூ10

*ஆலந்தூர் - அசோக்நகர்: ரூ.20

*ஆலந்தூர் - வடபழநி: ரூ.30

*ஆலந்தூர் - அரும்பாக்கம்: ரூ.40

*ஆலந்தூர் - சிஎம்பிடி புறநகர் பேருந்து நிலையம்: ரூ.40

*ஆலந்தூர் - கோயம்பேடு: ரூ.40

ரயில் பயண கால அட்டவணை:

*கோயம்பேடு - ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6 மணிக்கு புறப்படும்.

*கோயம்பேடு - ஆலந்தூர் இடையே கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.40 மணிக்கு இயக்கப்படும்.

*ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6.03 மணிக்கு புறப்படும்.

*ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.03 மணிக்கு இயக்கப்படும்.

எத்தனை ரயில்கள்?

*தினசரி கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 95 முறை ரயில்கள் இயக்கப்படும்.

*அதேபோல் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே 97 முறை ரயில்கள் இயக்கப்படும்.

*நாளொன்றுக்கு மொத்தம் 192 முறை ரயில்கள் இயக்கப்படும்.

*ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரயில் இயக்கப்படும்.

*அதிகபட்சமாக மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இருமார்க்கத்திலும் இலக்கை 19 நிமிடங்களில் சென்றடையும்.

*ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 35 விநாடிகள் ரயில் நின்று செல்லும்.

இவ்வாறு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயண அட்டை பெறுவது எப்படி?

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள கவுன்ட்டர்கள் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தில் ரூ.100 செலுத்தி பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இதில் அட்டைக்கான கட்டணம் ரூ.50, மீதமுள்ள ரூ.50-ல் பயணம் செய் யலாம். பின்னர், தேவைக்கு ஏற்ற வாறு ரூ.50 முதல் ரூ.3000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த அட்டையை கொண்டு ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது, அங்குள்ள சென்சார் வழியில் தேய்தால் போதும். உள்ளே அனு மதிக்கும். அடுத்தகட்டமாக பல் வேறு வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஏடிஎம் கார்டு மூலம் டிக்கெட் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் - சிறப்பு அம்சங்கள் - வீடியோ வடிவில்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்