மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கான புதிய துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும், குழுவிற்கான செனட் பிரதிநிதி இன்றி துணைவேந்தரை தேர்வு செய்வதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
இப்பல்கலைக் கழக துணை வேந்தர் பதவி கடந்த ஒராண்டுக்கு மேலாக காலியாக உள்ளது. நிர்வாகத்தை கவ னித்த தற்காலிக பதிவாளர் முத்துமாணிக்கமும் கடந்த 15 நாட்களுக்கு முன், ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, தற்காலிக பதிவாளராக பல் கலைக் கழக தேர்வாணையர் விஜயனை நியமித்து, உயர் கல்வித்துறை உத்தரவிட்டு ள்ளது.
இந்நிலையில் துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவில் இடம் பெற்றிருந்த சிண்டிக்கேட் பிரதிநிதி ராமசாமி 4 மாதத்திற்கு முன், ராஜினாமா செய்தார். இவருக்கு பதிலாக குழுவில் இடம் பெறவேண்டிய பிரதிநிதியை செனட் உறுப் பினர்கள் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தலை தமிழக ஆளுநர் ரோசய்யா அறிவிக்கவேண்டும். இதற்கான அறிவிப்பை விரை ந்து வெளியிடவேண்டும் என, பல்கலைக் கழகம் பரிந்துரை கடிதங்களை அனுப்பி உள் ளன. ஆனாலும், ஆளுநர் அலு வலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதன் கார ணமாக புதிய துணை வேந்தரை தேர்ந் தெடுப் பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக் கிறது.
பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது; புதிய துணை வேந்தரை தேர்ந்தெடுக்க குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக குழுவில் சிண்டிக்கேட், சென்ட் பிரதிநிதிகள் இடம் பெறுவர். தற்போது, செனட் பிரதிநிதி ராமசாமி ராஜினாமா செய்ததால், அவருக்கு பதிலாக பிரதிநிதி நியமிக்கவில்லை. அதற்கான தேர்தலில் ஓய்வு பெற்ற பேரா சிரியர்கள் போட்டியிடுவர். இந்த தேர்தல் மூலமே சென்ட் உறுப் பினர்களால் புதிய பிரதிநிதியை தேர்வு செய்ய வேண்டும். இதன்பின்னரே தேர்வு குழு செயல்பட துவங்கி, புதிய துணைவேந்தரை தீர்மானிக்கும். தேர்தலுக்கான அறிவிப்பு விரைந்து வெளியிடக்கோரி, உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago