தமிழக மீனவர்களுக்கு ஆபத்துக் கால எச்சரிக்கை விடுக்கும் கருவிகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. இக்கருவி முதற்கட்டமாக 1,600 மீனவர்களுக்கு வழங்கப்படும்.
தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் நாட்டுப் படகுகள், பைபர் படகுகள், விசைப்படகுகளில் மீனவர்கள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது திடீரென அவசர கால செய்திகள் அனுப்ப வேண்டும் என்றால் கைபேசி, வயர்லெஸ் வானொலி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் செயல்படுவதில்லை. மீனவர்கள் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள செயற் கைக்கோள் உதவியுடன் பேரிடர் எச்சரிக்கை கருவி (Distress Aler Transmitters) இஸ்ரோவின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கருவியை மீனவர்களின் நாட்டுப்படகு, பைபர் படகு, விசைப்படகுகளில் பொருத்தி படகின் இயந்திரம் பழுது, படகு தீப்பிடித்தல், படகில் ஓட்டை விழுந்து மூழ்குதல், மருத்துவ மற்றும் முதல் உதவி என ஒவ்வொரு உதவிக்கும் தனித்தனியாக பட்டன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆழ்கடலில் மீனவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது, அதற்குரிய பட்டனை அழுத் தினால் செயற்கைக்கோள் மூலம் அந்த தகவல் சென்னையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு உடனே சென்றடையும். இதில் உதவி தேவைப்படும் படகு எந்தக் கடலில் உள்ளது, படகு எவ்வளவு தூரத்தில் உள்ளது, படகில் என்ன பிரச்சினை ஆகிய விவரங்கள் கிடைத்து விடும்.
இந்த அவசர காலத் தகவல் இந்தியக் கடலோரக் காவல் படை, தமிழகக் கடலோரக் காவல் படை, மீன்வளத் துறை என உதவிக்கேற்ப உடனே தெரிவிக்கப்பட்டு ஆபத்தில் உள்ள மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.
இது குறித்து ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக சட்டப் பேரவையில் மீன்வளத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவில் ஆழ்கடலில் அவசர கால உதவிகளுக்காக 30 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.48 கோடியில் பேரிடர் எச்சரிக்கை கருவிகள் வழங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. இதில் 2015-16-ம் ஆண்டில் ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பில் 1,600 மீன்பிடி படகுகளுக்கு பேரிடர் எச்சரிக்கை கருவிகள் முதல்கட்டமாக தற்போது வழங்கப்பட உள்ளது.
ஒரு பேரிடர் எச்சரிக்கை கருவியின் விலை ரூ.15,240 ஆகும். இதற்கான தொகையில் மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 15 சதவீதமும் மானியமாக செலுத்தும். மீதம் 10 சதவீத தொகையான ரூ.1,524 மட்டும் மீனவர்கள் செலுத்தினால் போதுமானது.
முதல் கட்டமாக தமிழகத்தில் 13 கடற்கரை மாவட்டங்களில் ரூ.2 கோடி 60 லட்சம் செலவில் 1,600 விசைப்படகுகளுக்கு இந்த கருவி வழங்கப்படுகிறது. இதற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன் மீன்பிடி துறைமுகங்களில் 200 படகுகளுக்கு இந்த அவசர கால எச்சரிக்கை விடுக்கும் கருவி வழங்கப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago