தமிழகத்தில் நாசவேலைகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து ஊடுருவிய தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை யில் பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னையில் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய மற்றும் மாநில உளவுப் பிரிவு போலீ ஸார் கடந்த ஒரு வாரமாக ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இலங்கையின் கண்டி பகுதியை சேர்ந்த ஜாஹீர் உசேன் என்பவர் நாசவேலை திட்டங்களுடன் சென்னையில் ஊடுருவியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவ லின் பேரில் அவரைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு சுற்றுலா விசாவில் வந்தவர்கள் குறித்து சேகரிக்கப் பட்ட தகவலில் ஜாஹீர் உசேன் மாதம் 2 முறை வந்து சென்றிருப்பது தெரிந்தது. கடந்த வாரம் மீண்டும் சென்னை வந்த ஜாஹீரை விமான நிலையத்தில் இருந்தே உளவுப் பிரிவினர் பின்தொடர ஆரம்பித்தனர். மண்ணடியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த ஜாஹீரை ரகசியமாக கண்காணித்து வந் தனர். இந்நிலையில் தான் கண்காணிக்கப்படுவதை அறிந்த ஜாஹீர் செவ்வாய்க்கிழமை இரவில் தப்பிச்செல்ல முயன்றார். அப்போது அவரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஜாஹீரிடம் நடத்தப்பட்ட விசார ணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஜாஹீர் உசேன் இலங்கையில் பிறந்து வளர்ந்திருக்கிறார். இலங்கைக் கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் நீண்ட காலமாக நல்ல தொடர்பில் இருக்க, அதை வைத்தே பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிலும் இணைந்திருக்கிறார். பின்னர் இவரை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த திட்டமிட்டு, தமிழகத்துக்குள் ஊடுருவ வைத்துள்ளனர். ஜாஹீர் உசேனிடம் இருந்து ஒரு சாட்டிலைட் போன், சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களின் வரைபடங்கள், இந்திய ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், சில வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றி இருக்கிறோம்.
மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலைப்போல சென் னையிலும், பெங்களூரிலும் நடத்து வதற்கான இடத்தை தேர்வு செய்வது, தீவிரவாத செயல் களுக்கு ஆட்களை சேர்ப்பது, போலி பாஸ்போர்ட் தயார் செய்வது ஆகிய பணிகளை ஜாஹீரிடம் பாகிஸ்தான் அதிகாரி கள் ஒப்படைத்துள்ளனர். இதற் காகத்தான் பலமுறை இலங்கை யில் இருந்து ஜாஹீர் தமிழகத் துக்கு வந்து சென்றிருக்கிறார். ஜெமினி மேம்பாலம் வழியாக ஆட்டோவில் பலமுறை சென்று அமெரிக்க தூதரகத்தையும் பார்வை யிட்டுள்ளார். சென்னையில் சில பிரமுகர்கள் ஜாஹீருக்கு உதவி செய்துள்ளனர். அவர்கள் குறித்த தகவல்களையும் சேகரித்து வருகிறோம்" என்றார்.
ஜாஹீர் உசேன் செவ்வாய்க் கிழமை இரவு எழும்பூர் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சிவசுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து புழல் சிறை யில் அடைக்கப்பட்டார். ஜாஹீரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் புதன்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago